AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

எடப்பாடியை முழுமையாக நம்புகிறோம்.. அந்தர் பல்டி அடித்த எஸ்.பி.வேலுமணி.. என்ன காரணம்!

S P Velumani Latest Press Meet : அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை நாங்கள் முழுமையாக நம்புவதாக அந்தக் கட்சியின் முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி எம்எல்ஏ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இந்தப் பதிவில் பார்க்கலாம்.

எடப்பாடியை முழுமையாக நம்புகிறோம்.. அந்தர் பல்டி அடித்த எஸ்.பி.வேலுமணி.. என்ன காரணம்!
எடப்பாடி எஸ்பி வேலுமணி
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 16 Oct 2026 21:47 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம், ஆர். எஸ். புரத்தில் அமைந்துள்ள தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக உறுப்பினர் அலுவலகத்தில் கட்சியின் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி . வேலுமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக என்பது எம். ஜி. ஆர். ஆல் தொடங்கப்பட்டு, ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்ட இயக்கம் ஆகும். கடந்த 50 ஆண்டுகளில் கோயம்புத்தூரில் மிகப்பெரிய வளர்ச்சியை தந்துள்ளது அதிமுக மட்டுமே ஆகும். இந்த கட்சி தான் எங்களுக்கு அனைத்து பதவிகளையும் அளித்தது. கடந்த 31 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் இருந்தது. நான் எங்கும் செல்லவில்லை. இங்கு இருந்து தான் மக்கள் பணிகளை மேற்கொண்டு வருகிறேன். சி.வி. சண்முகம், நத்தம் விஸ்வநாதன் மற்றும் தங்கமணி ஆகியோர் என்னை அன்பாக வந்து பார்த்து செல்வார்கள்.

மதுராந்தகம்- தாராபுரத்தில் அதிமுக வாக்கு வங்கி குறைவு

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக வாக்கு வங்கி வெகுவாக குறைந்துள்ளது. நான் பொறுப்பாளராக இருந்தபோது தாராபுரத்தில் 80 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை அதிமுக பெற்று இருந்தது. ஆனால், தற்போது அந்த வெற்றி வாய்ப்பை இழந்துள்ளோம். நாம் கொடுத்த தொண்டர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளாட்சியில் வெற்றி பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்தனர். எங்களை முறையான கட்சியின் பொறுப்பாளர்களாக நியமிக்கவில்லை. இருந்தாலும் நாங்கள் கொடுத்த வாக்குச்சாவடிகளில் அதிக வாக்குகளை பெற்றுக் கொடுத்துள்ளோம்.

மேலும் படிக்க: ஒரே லாட்டரி நிறுவனம்.. திமுக- அதிமுக பெற்ற ரூ. 260 கோடி நன்கொடை.. அதிரவைக்கும் பின்னணி!

அதிமுக என்ற இயக்கம் நன்றாக இருக்க வேண்டும்

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் 20 இடங்களை கேட்டிருந்தார். அவரும் கட்சியில் இருந்திருந்தால் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலிலேயே அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமைந்திருக்கும். கடந்த 2024- ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் 4 மத்திய அமைச்சர்களை உருவாக்கி இருக்கலாம். இதனால், அதிமுக பல கூட்டணிகளை இழந்துள்ளது. அவை இருந்திருந்தால் இன்னும் வலுவாக இருந்திருக்கும். அதிமுக என்ற இயக்கம் நன்றாக இருக்க வேண்டும்.

எடப்பாடி பழனிசாமியை முழுமையாக நம்புகிறோம்

அதிமுக என்பது நமது இயக்கமாகும். வி. கே. சசிகலா, டி.டி.வி. தினகரன் மற்றும் அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்கள், பிரிந்து போனவர்கள் என அனைவரும் மீண்டும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அனைவரையும் அரவணைப்பார் என்றும், பிரச்சனைகளை ஆராய்ந்து திமுகவையும் பலப்படுத்துவார் என்றும் நாங்கள் நம்புகிறோம். செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததற்கு வலுக்கட்டாயமான சூழல்கள் இருந்திருக்கலாம் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: தயாராக இருந்த ஹெலிகாப்டர்.. கேரள செல்லவிருந்த முதல்வர் விஜய்.. பயணம் திடீர் ரத்து… பின்னணி என்ன!

Follow Us