AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கூகுள் பே- வில் ரூ. 10 ஆயிரம் லஞ்சம்.. ஆதாரத்துடன் சிக்கிய திருப்பத்தூர் மின்துறை ஊழியர்.. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி!

Tirupattur EB Employee Arrested : திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிய மின் இணைப்புக்கு ரூ. 10 ஆயிரம் லஞ்சம் பெற்ற மின் துறை ஊழியரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர் .

கூகுள் பே- வில் ரூ. 10 ஆயிரம் லஞ்சம்.. ஆதாரத்துடன் சிக்கிய திருப்பத்தூர் மின்துறை ஊழியர்.. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி!
மாதிரிப் புகைப்படம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 16 Oct 2026 20:59 PM IST

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியான கம்பி கொல்லை அருகே மின்வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் சிவகுமார் என்பவர் சிறப்பு நிலை முகவராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், ஆம்பூர் நகராட்சி 2- ஆவது தார்வழி பகுதியில் வசித்து வரும் ஒரு பெண் தனது வீட்டுக்கு மின் இணைப்பு கோரி இணையதளம் மூலமாக விண்ணப்பித்திருந்தார். இது தொடர்பாக கம்பி கொல்லை மின்வாரிய அலுவலகத்திற்கு நேரில் சென்று விவரம் கேட்டறிந்தார். அப்போது, பணியில் இருந்த சிறப்பு நிலை ஆக்க முகவர் சிவகுமார் புதிய மின் இணைப்பு வழங்குவதற்கு ரூ. 30 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

கூகுள் பே மூலமாக ரூ. 10 ஆயிரம் லஞ்சம்

இதற்கு நான் கேட்ட பணம் கொடுக்கவில்லை என்றால் புதிய மின் இணைப்பு கிடைக்காது என்று மின்துறை ஊழியர் சிவகுமார் தெரிவித்துள்ளார். அப்போதும், தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று அந்த பெண் தெரிவித்த நிலையில், மின்துறை ஊழியர் சிவகுமார் பேரம் பேசி ரூ. 10 ஆயிரம்- ஆவது தரவேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதற்கு, அந்த பெண் வேறு வழி இன்றி கூகுள் பே மூலமாக சிவகுமார் செல்போனுக்கு ரூ. 10 ஆயிரம் அனுப்பி உள்ளார்.

மேலும் படிக்க: அனுமதிக்கான தடை தகர்ந்தது.. தமிழகத்தில் 128 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி.. உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

மின்வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை

இந்த நிலையில், லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த பெண் இது தொடர்பாக திருப்பத்தூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் கம்பி கொல்லை மின்வாரிய அலுவலகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில், சிவகுமாரிடம் விசாரணை மேற்கொண்டனர். சுமார் 8 மணி நேரம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் ரூ. 10 ஆயிரம் லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டது.

ஊழல் தடுப்பு சட்டத்தில் மின்வாரிய ஊழியர் கைது

அத்துடன் அவரது செல்போனில் கூகுள் பே மூலமாக லஞ்சம் பெற்ற ஆதாரத்தையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து, மின்துறை ஊழியர் சிவகுமாரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீசார் அவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். கைதான சிவகுமாரின் மனைவி நிர்மலா மல்லக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: அட இவர தெரியலை.. இவருதான் எஸ்.ஐ.யை தாக்கிய இளைஞர்.. மீண்டும் பெண் காவலரை தாக்கிய சம்பவத்தில் அதிரடி கைது!

Follow Us