சென்னையில் திடீர் மழைக்கு வாய்ப்பு.. எங்கெல்லாம் மழை இருக்கும் – வெதர்மேன் பிரதீப் ஜான் சொல்லும் தகவல்..
Rainfall Alert: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று மாலை முதல் பல்வேறு இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இன்று காலையிலும் சில பகுதிகளில் மழை நீடிப்பதால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து காணப்படுகிறது. அடுத்த சில நாட்களிலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்புள்ளதாகப் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 16, 2026: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று அவ்வப்போது திடீர் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் திடீர் கனமழைக்கு வாய்ப்பு – பிரதீப் ஜான்:
Today rainfall Forecast – Another Interior day feast and widespread rains expected from KTCC (Chennai) interiors to Vellore, Ranipet, Tiruvannamalai, Tirupattur, Kallakuruchi, Villupuram, Salem, Dharmapurai will in hot spot of north side convergence of the UAC.
South side convergence Madurai, Dindigul, Permabalur, Delta belts of Mayiladuthurai, Cuddalore, Kumbakonam, Nagai, Tiruvarur, Thanjavur, Trichuy, Ariyalaur will all get rains.
Chennai – Some parts will get rains, some will be dry. Sudden spells here and there. Our time will come. Let other parts of Tamil Nadu get rains, what is important is Lake catchment areas getting rains.
Refer previous post for UAC location
— Tamil Nadu Weatherman (@praddy06) October 16, 2026
அக்டோபர் 15ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியதாகக் கூறப்படும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் இன்று சில இடங்களில் திடீர் மழை பெய்யக்கூடும் என பிரதீப் ஜான் தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், தர்மபுரி உள்ளிட்ட உள் மாவட்டங்களிலும் நல்ல மழைப்பொழிவு இருக்கக்கூடும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: நூற்றாண்டு கடந்தும் குறையாத கம்பீரம்.. 118 வது ஆண்டில் அடி எடுத்து வைத்த நீலகிரி மலை ரயில்!
மதுரை, திண்டுக்கல், பெரம்பலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, அரியலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, அக்டோபர் 16ஆம் தேதியான இன்று நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஈரோடு, திருப்பூர், விருதுநகர், கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, கரூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, திருச்சி, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, கடலூர், திருவள்ளூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: அதிமுகவில் மீண்டும் புதிய அணி உருவாகிறதா?.. எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம் ஆலோசனையால் பரபரப்பு!!
கன்னியாகுமரியில் 18 செ.மீ. மழை
கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தின் அடையாமடை பகுதியில் அதிகபட்சமாக 18 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சித்திரங்கோடு பகுதியில் 16 செ.மீ. மழை பெய்துள்ளது. பொள்ளாச்சி (கோவை மாவட்டம்), பொதுப்பணித்துறை மக்கினாம்பட்டி (கோவை மாவட்டம்), பெரியகுளம் (தேனி மாவட்டம்) – தலா 15 செ.மீ., பொன்மனை (கன்னியாகுமரி மாவட்டம்) – 14 செ.மீ., – ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (ஈரோடு மாவட்டம்), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி மாவட்டம்), க.பரமத்தி (கரூர் மாவட்டம்), ராஜதானி (தேனி மாவட்டம்), பொள்ளாச்சி தானியங்கி வானிலை மையம் (கோவை மாவட்டம்), பொதுராவுத்தன்பட்டி (கரூர் மாவட்டம்) – தலா 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதற்கிடையே, நீலகிரி, கரூர், ராமநாதபுரம், கோவை ஆகிய மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தொடரும் மழை
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று மாலை முதல் பல்வேறு இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இன்று காலையிலும் சில பகுதிகளில் மழை நீடிப்பதால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து காணப்படுகிறது. அடுத்த சில நாட்களிலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்புள்ளதாகப் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.