மதுரை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. 25 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை..
Rainfall Alert: ஈரோடு, திருப்பூர், விருதுநகர், கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, கரூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, கடலூர், திருவள்ளூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அக்டோபர் 16, 2026: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை (Northeast Monsoon) தொடங்கியுள்ள நிலையில், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, அக்டோபர் 16ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை முதல் மிக கனமழை (Orange Alert) பெய்யக்கூடும்.
அக்டோபர் 16: 25 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
ஈரோடு, திருப்பூர், விருதுநகர், கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, கரூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, கடலூர், திருவள்ளூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
அக்டோபர் 17 முதல் 21 வரை மழை எச்சரிக்கை
அக்டோபர் 17: நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
அக்டோபர் 18: நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
மேலும் படிக்க: இலங்கை டூ திருச்சி வந்த விமானம்.. சுங்கத்துறை சோதனையில் சிக்கிய ரூ.36.89 லட்சம் தங்கம்.. சுங்கத்துறை தீவிர விசாரணை!
அக்டோபர் 19: நீலகிரி, கோயம்புத்தூர், திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், மதுரை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
அக்டோபர் 20: நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
அக்டோபர் 21: நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது
அக்டோபர் 15 முதல் 18ஆம் தேதி வரை தமிழகத்தின் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 15ஆம் தேதி உள் தமிழகத்தின் சில இடங்களில் வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கலாம். அக்டோபர் 16 முதல் 19ஆம் தேதி வரை வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: கோவையில் மின் இணைப்புக்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம்.. பொறி வைத்த ஊழல் தடுப்பு போலீஸ்.. வணிக ஆய்வாளர் உள்பட இருவர் அதிரடி கைது!
சென்னை வானிலை நிலவரம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (அக்டோபர் 16) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.