இலங்கை டூ திருச்சி வந்த விமானம்.. சுங்கத்துறை சோதனையில் சிக்கிய ரூ.36.89 லட்சம் தங்கம்.. சுங்கத்துறை தீவிர விசாரணை!
Trichy Airport Gold Smuggled : திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இலங்கையில் இருந்து வந்த விமானத்தில் இரு ஆண் பயணிகள் கடத்தி வந்த ரூ. 36.89 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்தில் புதுக்கோட்டை செல்லும் சாலையில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கு இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதே போல, உள்நாட்டிலும் விமான சேவை இருந்து வருகிறது. பயணிகள் அதிக அளவு பயன்படுத்தி வரும் இந்த விமான நிலையத்தில் துணை ராணுவ படையினர், மாநில போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விமான நிலையத்துக்கு வரும் பயணிகளின் உடைமைகள் மற்றும் பயணிகள் ஆகியவை உரிய சோதனைக்கு பின்னரே விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இதே போல, வெளிநாடுகளில் இருந்து விமானத்தில் பயணம் மேற்கொண்டு வரும் பயணிகள் சோதனைக்கு பின்னரே வெளியே செல்ல அனுமதிக்கப்படுபவர். அவ்வளவு அளவிலான சோதனை கட்டுப்பாடுகள் இருந்து வருகிறது.
இலங்கையில் இருந்து தீருச்சி வந்த விமானம்
இவ்வளவு சோதனைகளையும் மீறி சில பயணிகள் வெளிநாடுகளில் இருந்து தங்கம், அரிய வகை உயிரினங்கள், இ சிகரெட் உள்ளிட்ட பொருட்களை கடத்தி வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் துணை ராணுவ படையினர் சோதனையில் பறிமுதல் செய்வதும் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், இலங்கை நாட்டின் தலைநகர் கொழும்புவில் இருந்து திருச்சிக்கு பயணிகள் விமானம் ஒன்று வந்தது. இதில், ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர்.
மேலும் படிக்க: “எங்க கொண்டு வந்து நிறுத்திருக்க பாத்தியா” குறுகலான பாதையில் சிக்கிய கார்… காரணம்.. “That கூகுள் மேப்”




ரூ. 36.89 லட்சம் மதிப்பிலான தங்கம் கடத்தல்
அவர்கள் திருச்சி விமான நிலையத்தில் இறங்கி வெளியே செல்ல முற்பட்டபோது சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், இரண்டு ஆண் பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். இதில், அந்த நபர்கள் தங்களது உடம்பில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து, கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ. 36 லட்சத்து 89 ஆயிரம் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரு பயணிகள் மீது வழக்குப்பதிவு- விசாரணை
இதைத் தொடர்ந்து, இலங்கையில் இருந்து தங்கத்தை கடத்தி வந்த இரு ஆண் பயணிகள் மீதும் சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், வேறு ஏதேனும் பொருட்களை கடத்தி வந்தனரா. இதே போல, இதற்கு முன்பு ஏதேனும் தங்கம் உள்ளிட்ட பொருட்கள் கடத்திவரப்பட்டதா. வேறு யாருக்கு இதில் தொடர்பு உள்ளதா என்பன உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க: மனைவியுடன் உல்லாசம்.. கையும் களவுமாக சிக்கிய சென்னை தவெக பிரமுகர்.. ஆத்திரத்தில் கணவன் செய்த காரியம்!