AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்ற மாட்டேன்.. விவசாயிகள், நெசவாளர்களுக்கான வாக்குறுதிகளை அறிவித்த விஜய்..

 TVK Vijay Campaign: பெருமாநல்லூரில் பேசிய அவர், “என் நெஞ்சில் குடியிருக்கும் கொங்கு மண்டல தங்கங்களே, திருப்பூர் பகுதி மக்களே” என உரையை தொடங்கினார். “நாளை மறுநாள் தேர்தல் வாக்குறுதிகளை புத்தகமாக வெளியிடுகிறோம்; அதற்கு முன் சில முக்கிய அறிவிப்புகளை பகிர்கிறேன்” என்றார்.

வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்ற மாட்டேன்.. விவசாயிகள், நெசவாளர்களுக்கான வாக்குறுதிகளை அறிவித்த விஜய்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 14 Apr 2026 18:22 PM IST

திருப்பூர், ஏப்ரல் 14, 2026: தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், திருப்பூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட போது நெசவாளர்கள், சிறு-நடுத்தர தொழில்கள், விவசாயிகள் மற்றும் அரசு ஊழியர்கள் தொடர்பான பல முக்கிய வாக்குறுதிகளை அறிவித்தார். பெருமாநல்லூரில் பேசிய அவர், “என் நெஞ்சில் குடியிருக்கும் கொங்கு மண்டல தங்கங்களே, திருப்பூர் பகுதி மக்களே” என உரையை தொடங்கினார். “நாளை மறுநாள் தேர்தல் வாக்குறுதிகளை புத்தகமாக வெளியிடுகிறோம்; அதற்கு முன் சில முக்கிய அறிவிப்புகளை பகிர்கிறேன்” என்றார்.

நெசவாளர்களுக்கான அறிவிப்புகள்:

  • நெசவாளர்களின் தயாரிப்புகளை சர்வதேச சந்தையில் விற்க அரசு சார்ந்த உலகளாவிய இ-காமர்ஸ் பிராண்ட் உருவாக்கப்படும்
  • முக்கிய நகரங்களில் “வெற்றி தறி” விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும்
  • கைத்தறி, விசைத்தறி நெசவாளர் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ₹30,000 நேரடி வங்கி பரிமாற்றம்
  • கைத்தறிக்கு 500 யூனிட், விசைத்தறிக்கு 1500 யூனிட் இலவச மின்சாரம்
  • நூல், சாயம், ரசாயனங்களுக்கு 50% மானியம்
  • அனைத்து நெசவாளர்களுக்கும் ₹10 லட்சம் ஆயுள் காப்பீடு
  • முதியோர் ஓய்வூதியம் மாதம் ₹3,000 ஆக உயர்வு

மேலும் படிக்க: பிரதமரை மிரட்டும் தொனியில் பேசுவதா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கண்டனம்..

சிறு, குறு & நடுத்தர தொழில்கள் (MSME):

  • ₹15,000 கோடி “ஸ்டேட் கிரெடிட் கேரண்டி ஃபண்ட்” உருவாக்கம்
  • பீக் அவர் மின்கட்டணம் ரத்து
  • அடுத்த 5 ஆண்டுகள் 100% மின்சார வரி விலக்கு
  • தொழில்களை நவீனமயமாக்க 35% மூலதன மானியம் (ஒரு யூனிட்டுக்கு ₹50 லட்சம் வரை)
  • தமிழ்நாட்டில் MSME மூடல் அதிகரித்தது திமுக ஆட்சியின் தோல்வி என விமர்சனம்

விவசாயிகளுக்கான வாக்குறுதிகள்

  • 5 ஏக்கருக்கு குறைவான விவசாயிகளுக்கு பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி
  • 5 ஏக்கருக்கு மேல் உள்ளவர்களுக்கு 50% தள்ளுபடி
  • MSPக்கு சட்டபூர்வ உத்தரவாதம்
  • நெல்லுக்கு ₹3,500 / குவிண்டால், கரும்புக்கு ₹4,500 / டன்
  • “உழவர்களின் தோழன்” திட்டம்: ஆண்டுக்கு ₹10,000 உதவி
  • 100% பயிர் காப்பீடு

அரசு ஊழியர்கள் & காவல்துறையினர்

  • பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் பரிசீலனை
  • 5+ ஆண்டுகள் பணிபுரிந்த தற்காலிக பணியாளர்கள் நிரந்தரம்
  • பதவி உயர்வுக்கு லஞ்ச கலாச்சாரம் ஒழிப்பு
  • இடமாற்றங்கள் வெளிப்படையான முறையில் நடைமுறை
  • காவலர் அடிப்படை ஊதியம் ₹25,000 ஆக உயர்வு
  • மன அழுத்தப் பணிகளுக்கு ₹1,000 கூடுதல் படி
  • காவலர் நலன் சட்டம் கொண்டு வருதல்
  • வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை
  • சலவைப் படி ₹1,000 ஆக உயர்வு
  • முக்கிய நகரங்களில் காவலர் நல மருத்துவமனைகள்
  • பெண் காவலர்களுக்கு பாதுகாப்பு பணிகளில் கட்டாய நியமனம் இல்லை
  • பெண்களுக்கு தனி ஓய்வறை, மொபைல் டாய்லெட் வசதி

Follow Us