AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திருப்பூரில் விஜய்யின் பரப்புரை.. அடுத்தடுத்து மயங்கி விழுந்த 14 பேர்..

விஜயின் வருகைக்காக பெருமாநல்லூரில் காத்திருந்த தமிழக வெற்றிக்கழக வேட்பாளருக்கு மயக்கம் ஏற்பட்டது. அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், விஜயைக் காண ஏராளமான பொதுமக்கள் பல மணி நேரமாக கடும் வெயிலிலும் காத்திருந்தனர். இதன் காரணமாக, 8 பெண்கள் அடுத்தடுத்து மயக்கம் அடைந்தனர். நீண்ட நேரம் வெயிலில் நின்றதாலேயே அவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிய பரபரப்பை ஏற்படுத்தியது. 

திருப்பூரில் விஜய்யின் பரப்புரை.. அடுத்தடுத்து மயங்கி விழுந்த 14 பேர்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 14 Apr 2026 17:12 PM IST

திருப்பூர், ஏப்ரல் 14, 2026: தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று திருப்பூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த நிலையில், அவரைக் காண வந்த மக்களில் கிட்டத்தட்ட 14 பேர் மயக்கம் அடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வரவிருக்கும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என அனைவரும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மாவட்டம் தோறும் சென்று ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

திருப்பூரில் விஜய் பிரச்சாரம்:

இந்நிலையில், ஏப்ரல் 14ஆம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவிநாசி, பல்லடம், காங்கேயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

மேலும் படிக்க: பிரதமரை மிரட்டும் தொனியில் பேசுவதா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கண்டனம்..

இதற்காக, சென்னையிலிருந்து இன்று காலை கோவைக்கு விமானம் மூலம் சென்றடைந்த அவர், அங்கிருந்து சாலை மார்க்கமாக அவிநாசி சென்றார். பிற்பகலில் ஆட்டையாம்பாளையம் பகுதியில் இருந்து பிரச்சார வாகனத்தில் புறப்பட்டு, அவிநாசி பழைய பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையம் பகுதிகளில் ரோடு ஷோ மேற்கொண்டு, வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரினார்.

அதனைத் தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலை வழியாக பெருமாநல்லூர் நால்ரோடு சென்று பிரச்சாரம் செய்தார். பின்னர் பூலுவபட்டி வரை ரோடு ஷோ நடத்தி பிரச்சாரம் மேற்கொண்டார். பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய இந்த பிரச்சாரம் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதற்காக காவல்துறை பல்வேறு நிபந்தனைகளையும் விதித்திருந்தது.

வேட்பாளர் உள்ப்ட 14 பேர் மயக்கம்:

இந்த நிலையில், விஜயின் வருகைக்காக பெருமாநல்லூரில் காத்திருந்த தமிழக வெற்றிக்கழக வேட்பாளருக்கு மயக்கம் ஏற்பட்டது. அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், விஜயைக் காண ஏராளமான பொதுமக்கள் பல மணி நேரமாக கடும் வெயிலிலும் காத்திருந்தனர்.

இதன் காரணமாக, 8 பெண்கள் அடுத்தடுத்து மயக்கம் அடைந்தனர். நீண்ட நேரம் வெயிலில் நின்றதாலேயே அவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிய பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், பலமுறை அறிவுறுத்தப்பட்டும், மக்கள் தங்களது குழந்தைகளுடன் அதிக அளவில் வந்திருந்தது சற்று கவலைக்கிடமான விஷயமாக இருந்தது. தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மாவட்டம் தோறும் சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், அவருக்கு மக்கள் தரப்பில் அமோக வரவேற்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Follow Us