AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“கர்நாடகா போகாதீங்க.. என்ன பேச்சு வார்த்தை?”.. முதல்வர் விஜய்க்கு தலைவர்கள் வலியுறுத்தல்!!

Mekedatu Row: Leaders Warn CM Vijay: மேகதாட்டு பேச்சுவார்த்தை முதல்வர் விஜய் கர்நாடகா எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சித் தலைவர்களும் விவசாயிகளும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். கர்நாடகம் செல்லும் முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும் என மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர் வலியுறுத்தியுள்ளனர்.

“கர்நாடகா போகாதீங்க.. என்ன பேச்சு வார்த்தை?”.. முதல்வர் விஜய்க்கு தலைவர்கள் வலியுறுத்தல்!!
முதல்வர் விஜய்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 26 Jul 2026 10:26 AM IST

சென்னை, ஜூலை 26: காவிரி நதிநீர் உரிமை மற்றும் மேகதாட்டு அணை விவகாரம் தொடர்பாகக் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் ஜோசப் விஜய் நேரில் செல்லக்கூடும் என்ற தகவலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், விவசாயச் சங்கப் பிரதிநிதிகளும் கடுமையான எதிர்ப்பையும் எச்சரிக்கையையும் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க: கன்னத்தில் கை வைத்தது குற்றமா? எஸ்பிஐ வங்கி மேலாளருக்கு பளார்.. மு. க. அழகிரி மகள் மீது வழக்கு பதிவு!

ஆகஸ்ட் 3-ல் சந்திப்பு?: பின்னணியும் கொந்தளிப்பும்:

வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமாரை, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் சந்தித்துக் காவிரி மற்றும் மேகதாட்டு அணை விவகாரம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இத்தகவலைத் தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத்தும் உறுதிப்படுத்தியிருந்தார்.

இருப்பினும், “கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்துவது தமிழ்நாட்டின் உரிமைக்கு முற்றுப்புள்ளி வைப்பது போல் பாதகமாக முடியும் என்பதால், முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்லும் முடிவைக் கைவிட வேண்டும்” எனத் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தலைவர்களின் காரசாரக் கண்டனங்கள்:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: “காவிரி உரிமைத் தொடர்பாகக் கர்நாடகம் சென்று பேச்சுவார்த்தை நடத்தும் தவறான முயற்சியை முதலமைச்சர் விஜய் உடனடியாகக் கைவிட வேண்டும். சட்டப் போராட்டம் மூலம் மட்டுமே காவிரியின் உரிமையை நிலைநாட்ட முடியும்.” “மேகதாட்டு அணையையே நாம் ஏற்கவில்லை எனும் போது, அதற்காக எதற்குப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்? சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமே போதுமானது. பேச்சுவார்த்தைக்குப் பதிலாக உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.”

விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள்: “கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாரின் சொந்தத் தொகுதியான கனகபுராவில்தான் மேகதாட்டு அணை அமையவுள்ளது. அவர் தனது அரசியல் லாபத்திற்காக அணை கட்ட முயல்கிறார். அவரிடம் சென்று பேசுவதால் எந்தப் பயனும் இல்லை. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அமல்படுத்தச் சட்டப்பூர்வ நடவடிக்கைகளில் மட்டுமே அரசு ஈடுபட வேண்டும்.”

மேட்டூர் அணை திறக்கப்படாத அவலம்:

தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விடக் குறைவாகப் பெய்துள்ள நிலையில், காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய உரிய நீரை கர்நாடக அரசு திறந்து விடவில்லை. வழக்கமாக ஜூன் 12-ஆம் தேதி பாசனத்திற்காகத் திறக்கப்படும் மேட்டூர் அணை, தண்ணீர் வரத்து இல்லாததால் இதுவரை திறக்கப்படவில்லை.

மேலும் படிக்க: தந்தை கண்முன்னே சோகம்.. திருவண்ணாமலை அருகே தனியார் பேருந்து மோதி விபத்து.. கல்லூரி மாணவி பரிதாப பலி!

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்திலும் “தற்போது தண்ணீரைத் திறந்து விட முடியாது” என கர்நாடகா கைவிரித்துவிட்ட நிலையில், மேகதாட்டு அணை கட்டும் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகிறது. இத்தகைய சூழலில், தமிழக அரசு பேச்சுவார்த்தை என்ற பெயரில் கர்நாடகம் செல்வது மாநில உரிமையைப் அடகு வைப்பதற்குச் சமம் எனப் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Follow Us