ஸ்ரீதேவியின் அருகே இருக்கும் இந்த சிறுமி யார் தெரியுமா? பிரபல ஹீரோவின் மனைவி இவர்!!
Tamil Actress Childhood Photo: சினிமா வட்டாரங்களில் பிரபலமான நடிகர்கள் மற்றும் நடிகைகளின் அடையாளம் தெரியாத புகைப்படங்கள் இணையத்தில் பரவிவருவது வழக்கமே. அந்த விதத்தில் இந்த போட்டோவில் நடிகை ஸ்ரீதேவியக்கு அருகே அமர்ந்திருக்கும் சிறுமி யார், அவர் எந்த நடிகை என விவரமாக தெரிந்துகொள்ளலாம்.
தென்னிந்திய சினிமா வட்டாரங்களில் அடையாளம் தெரியாத நடிகர்கள் மற்றும் நடிகைகளின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது. சிறுவயதில் கியூட்டாக இருக்கும் திரை நட்சத்திரங்களின் (screen stars) போட்டோக்கள் இணையத்தில் வேகமாக பரவிவருகிறது. அந்த விதத்தில் மேலே இருக்கும் புகைப்படத்தில் நடிகை ஸ்ரீதேவியின் (Actress Sridevi) பக்கத்தில் அமர்ந்திருக்கும் சிறுமி யார் தெரியுமா?. ஐவரும் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவர்தான். இவர் தமிழில் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவின் (SJ Suryah) இயக்கத்தின் மூலம் கதாநாயகியாக நுழைந்தவர். அதற்கு முன் இந்தி சினிமாவில் நாயகியாக நடித்தவந்தார். இவர் நாயகியாக நடித்துவரும் நிலையில், அவருடன் பிறந்தவர்களும் படங்களில் நடிகைகளாக நடித்திருக்கிறார்கள். மேலும் இந்த நடிகை தமிழில் பிரபல ஹீரோவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர் தமிழில் விஜய் (Vijay) முதல் சூர்யா (Suriya) உட்பட பல்வேறு நடிகர்களுடன் ஜோடியாக படங்களில் பணியாற்றியுள்ளார்.
திருமணத்திற்கு பின்னும் பெண்ணியம் மையமாக கொண்ட படங்களில் இவர், தற்போது முழுவதுமாக தமிழ் சினிமாவை விட்டு இந்தி சினிமாவின் பக்கம் சென்றுவிட்டார். இப்போது இந்த நடிகை யார் என தெரிந்திருக்கும் என நினைக்கிறேன், அட இது நடிகை ஜோதிகாதான் (Jyothika).




இதையும் படிங்க: சூர்யா சாரை அடி அடினு போட்டு அந்த படத்தில் அடித்தேன் – சாய் பல்லவி கலகல பேச்சு!
நடிகை ஜோதிகாவின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:
View this post on Instagram
நடிகை ஜோதிகா தமிழ் சினிமாவில் கடந்துவந்த பாதை:
நடிகை ஜோதிகா கடந்த 1998ம் ஆனதில் டோலி ஸஜ்தா கி ரக்ஷனா என்ற இந்தி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். இந்த படத்திற்கு பின், இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவின் இயக்கத்தில் 1999ல் வெளியான வாலி என்ற படத்தின் மூலம் தமிழில் நுழைந்தார். பின் தமிழில் தனது 2வது படத்திலே சூர்யாவுக்கு ஜோடியானார். இயக்குநர் வசந்த் இயக்கத்தில் வெளியான பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்து அசத்தியிருந்தார். இந்த படத்திற்கு பின் குஷி, ரிதம், உயிரில் கலந்து, சிநேகிதியே, தெனாலி மற்றும் ஸ்டார் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.
இதையும் படிங்க: அந்த நடிகர்களுக்கு மட்டும் அம்மாவாக நடிக்கமாட்டேன்.. நடிகை சரண்யா பொன்வண்ணன் சொன்ன விஷயம்!
இவர் சூர்யாவுடன் மட்டுமே கிட்டத்தட்ட 4 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். பூவெல்லாம் கேட்டுப்பார், காக்க காக்க, மாயாவி, பேரழகன் மற்றும் சில்லுனு ஒரு காதல் போன்ற படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார். மேலும் இவர் தமிழ் சினிமாவில் தனக்கு பெரும் வரவேற்பு கிடைக்கவில்லை என கூறி, தற்போது முழுவதும் பாலிவுட் சினிமாவில் இறங்கிவிட்டார். இவர் இறுதியாக இரா.சரவணன் இயக்கத்தில் உடன்பிறப்பே என்ற படத்தில் நடித்திருந்தார். 2021ல் வெளியான இப்படத்திற்கு பின் எந்த தமிழ் படங்களிலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.