AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிளிப்கார்ட் சேல்.. வெறும் ரூ.55,000-க்கே ஐபோன் 17 வாங்கலாம்.. எப்படி?

Flipkart Big Billion Days Sale 2026 | பிளிப்கார்ட் நிறுவனம் தனது பிக் பில்லியன் டேஸ் சேலை நடத்தி வருகிறது. இந்த சேலில் ஐபோன் 17 ஸ்மார்ட்போனை வெறும் ரூ.55,000-க்கு வாங்கிக்கொள்ள முடியும். அது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பிளிப்கார்ட் சேல்.. வெறும் ரூ.55,000-க்கே ஐபோன் 17 வாங்கலாம்.. எப்படி?
ஐபோன் 17
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 17 Oct 2026 16:32 PM IST

பிளிப்கார்ட் நிறுவனம் 2026 ஆம் ஆண்டுக்கான தனது பிக் பில்லியன் டேஸ் சேலை (2026 Flipkart Big Billion Days Sale) நடத்தி வருகிறது. இந்த சேலில் அந்த நிறுவனம், ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் உள்ளிட்ட மின்சாதன பொருட்களுக்கு அசத்தல் தள்ளுபடிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் ஆப்பிள் ஐபோன் 17 (Apple iPhone 17) ஸ்மார்ட்போனுக்கு அசத்தல் சலுகையை வழங்கியுள்ளது. அதன் மூலம் ஆப்பிள் ஐபோன் 17-ஐ வெறும் ரூ.55,000-க்கு வாங்கிக்கொள்ள முடியும். இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் ஐபோன் 17-க்கு வழங்கியுள்ள சிறப்பு சலுகை குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரூ.86,999-க்கு விற்பனையாகும் ஐபோன் 17

பிளிப்கார்ட் தனது பிக் பில்லியன் டேஸ் சேலில் ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தான், ரூ.99,900 மதிப்பிலான ஐபோன் 17 ஸ்மார்ட்போனை ரூ.86,999-க்கு விற்பனை செய்கிறது. ஆனால், வங்கி சலுகைகள், எக்ஸ்சேஞ் சலுகைகள் ஆகியவற்றின் மூலம் இந்த ஸ்மார்ட்போனை நீங்கள் வெறும் ரூ.54,149-க்கு வாங்கிக்கொள்ளலாம். ஆனால், இவ்வளவு குறைவான விலைக்கு நீங்கள் ஐபோன் 17-ஐ வாங்க வேண்டும் என நினைத்தால் அதற்கு ஈடான ஒரு ஸ்மார்ட்போனை நீங்கள் எக்ஸ்சேஞ் செய்ய வேண்டும்.

இதையும் படிங்க : தீபாவளிக்கு விலை உயரும் பட்ஜெட் போன்கள் – ரூ.20,000க்குள் வாங்கக்கூடிய 5 சிறந்த 5ஜி போன்கள்

ஐபோன் 17-க்கு பிளிப்கார்டில் கிடைக்கும் சலுகைகள்

256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஐபோன் 17 ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் ரூ.86,999-க்கு பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், இந்த ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கார்டு அல்லது பிளிப்கார்ட் எஸ்பிஐ கார்டு ஆகியவற்றுக்கு கூடுதலாக ரூ.5,000 தள்ளுபடி வழங்கப்படும். இதன் மூலம் ஐபோன் 17 ஸ்மார்ட்போனின் விலை ரூ.81,999 ஆக குறைந்துவிடும்.

இதையும் படிங்க : காணாமல் போன ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை கண்டுபிடிப்பது எப்படி?.. Google Find My Hub இருந்தால் போதும்!

எக்ஸ்சேஞ்ச் சலுகைகள்

பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ்ச் செய்வதன் மூலம் இன்னும் குறைந்த விலைக்கு வாங்கிக்கொள்ள முடியும். அதாவது, நீங்கள் ஐபோன் 14-ஐ எக்ஸ்சேஞ் செய்கிறீர்கள் என்றால் அதற்கு ரூ.27,850 வழங்கப்படும் நிலையில், கூடுதலாக வழங்கப்படும் ரூ.5,000 வங்கி தள்ளுபடியை சேர்த்து வெறும் ரூ.54,149-க்கு வாங்கிக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us