IND vs WI 5th T20: அழையா விருந்தாளியாக மழை.. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் தொடரை வெல்லப்போவது யார்..?
Chinnaswamy Stadium Weather Forecast: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் 5வது டி20 பெங்களூருவில் இன்று நடக்கிறது. தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இந்த போட்டியை மழை அச்சுறுத்துகிறது. கனமழை வாய்ப்பால் போட்டி கைவிடப்படலாம், தொடர் 2-2 என சமன் பெறும். புவனேஷ்வர் குமார் அணிக்கு திரும்புவாரா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. வானிலை இந்த தொடரின் முடிவில் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான (IND vs WI) 5வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று அதாவது 2026 அக்டோபர் 17ம் தேதி, பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை 3.2 என்ற கணக்கில் வெல்லும். 4வது டி20 போட்டியில் அர்ஷ்தீப் சிங்கிற்கு ஏற்பட்ட காரணமாக ஐந்தாவது டி20 போட்டிக்கான இந்திய அணியில் புவனேஷ்வர் குமார் சேர்க்கப்பட்டிருந்தார். எனவே, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு புவனேஷ்வர் குமார் இந்திய அணியின் (Indian Cricket Team) ஆடும் லெவனில் இடம்பெறக்கூடும். இருப்பினும், பெங்களூருவில் நிலவும் வானிலையால் போட்டி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ALSO READ: பெங்களூருவில் மழை அச்சுறுத்தல்.. இந்திய அணி தொடரை வெல்லுமா..?
பெங்களூருவில் வானிலை எப்படி இருக்கும்..?
2026 அக்டோபர் 17ம் தேதியான இன்று பெங்களூரு மக்களுக்கு வானிலை இதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு அவ்வாறு இருக்காது. போட்டி இந்திய நேரப்படி இரவு 7:00 மணிக்குத் தொடங்கும். போட்டிக்கு முன்பு கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இரவு 7:00 மணியளவில் மழை பெய்ய 67 சதவீத வாய்ப்புள்ளது.




இரவு 8 மணி மற்றும் அதற்குப் பிறகும் கனமழையும் மின்னலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 5 ஓவர் போட்டி கூட நடைபெறாமல் போக வலுவான வாய்ப்புள்ளது. இந்தநிலையில், மழையின் காரணமாக இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 5வது டி20 போட்டி கைவிடப்பட்டால், யார் தொடரை வெல்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மழை பெய்தால், யார் வெற்றி பெறுவார்கள்?
பெங்களூருவில் 2026 அக்டோபர் 17ம் தேதியான இன்று நடைபெறும் ஐந்தாவது டி20 போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டால், தொடர் 2-2 என சமநிலையில் முடியும். மேலும் இரு அணிகளும் கோப்பையைப் பகிர்ந்து கொள்ளும். சொந்த மண்ணில் நடந்த டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவை இதுவரை தோற்கடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில், ஷாய் ஹோப்பின் தலைமையில், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் முறையாக சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்தக்கூடும். இருப்பினும், மழை வெஸ்ட் இண்டீஸ் அணியின் நம்பிக்கையைத் தகர்க்கக்கூடும்.
ALSO READ: பெங்களூருவில் மோதும் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ்.. சின்னசாமி ஸ்டேடியத்தின் சாதனை என்ன?
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5வது டி20 போட்டியில் புவனேஷ்வர் குமார் விளையாடுவாரா இல்லையா என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது. ஒருவேளை அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்தால், மயங்க் யாதவ் அல்லது பிரின்ஸ் யாதவ் ஆகிய இருவரில் ஒருவர் வெளியே உட்கார வேண்டியிருக்கும்.