IND vs WI 5th T20 Live Score: டாஸுக்கு முன் வந்த மழை.. போட்டி தொடங்க தாமதம்..!
India vs West Indies 5th T20 Live Cricket Score in Tamil: இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் ஒரு முக்கியமான மோதலுக்குக் களம் தயாராகியுள்ளது. முதல் நான்கு போட்டிகளுக்குப் பிறகு தொடர் 2-2 என சமநிலையில் இருப்பதால், ஐந்தாவது டி20 போட்டியின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது.
LIVE NEWS & UPDATES
-
India vs West Indies 5th T20I Live: டாஸுக்கு முன் வந்த மழை.. போட்டி தொடங்க தாமதம்..!
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 5வது டி20 போட்டியில் 6.30 மணிக்கு டாஸ் போடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மழை காரணமாக டாஸ் போடும் நிகழ்வு தாமதமானது.
-
India vs West Indies 5th T20I Live: பெங்களூரு எம். சின்னசாமி ஸ்டேடியத்தின் பிட்ச் ரிப்போர்ட்!
பெங்களூருவின் எம். சின்னசாமி ஸ்டேடியம் பந்துவீச்சாளர்களுக்கு எதிரி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மைதானம் மிகவும் சிறியது. குறுகிய பவுண்டரி லைன்களை கொண்டிருப்பதால் பேட்ஸ்மேன்களுக்கு எளிதாக ரன்களை சேர்க்க உதவும். மிகவும் சாதகமான பிளாட் பிட்சை கொண்டுள்ளதால், பந்து எளிதாக பேட்டுக்கு வரும், மேலும், ஐபிஎல் போட்டிகளில் இங்கு அதிக ரன்கள் குவிக்கப்படுகின்றன.
-
India vs West Indies 5th T20I Live: மழையின் காரணமாக போட்டி கைவிடப்படுமா?
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையிலான ஐந்தாவது டி20 போட்டியை மழை அச்சுறுத்துகிறது. பிபிசி வானிலை தகவலின்படி, 2026 அக்டோபர் 17ம் தேதியான இன்று பெங்களூருவில் நடைபெறும் போட்டியின் போது மழை பெய்ய 70 சதவீத வாய்ப்புள்ளது. போட்டி தொடங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு, அதாவது மாலை 5 மணிக்கு, மழை பெய்ய 66 சதவீத வாய்ப்புள்ளது. மாலை 6 மணிக்கு மழை பெய்ய 68 சதவீத வாய்ப்புள்ளது. மழை போட்டியைப் பாதிக்கவும் வாய்ப்புள்ளது.
-
India vs West Indies 5th T20I Live: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இதுவரை டி20 போட்டியில் நேருக்கு நேர்!
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான நேருக்கு நேர் டி20 சர்வதேசப் போட்டிகளில் இந்திய அணியே ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த வடிவத்தில் இரு அணிகளும் 35 முறை சந்தித்துள்ளன. இவற்றில் இந்தியா 22 போட்டிகளிலும், மேற்கிந்திய தீவுகள் 12 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
-
India vs West Indies 5th T20I Live: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 5வது டி20 போட்டி எப்போது?
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் விறுவிறுப்பான கட்டத்தில் உள்ளது. இந்தத் தொடரின் இறுதி டி20 போட்டியான 5வது போட்டி இன்று அதாவது 2026 அக்டோபர் 17ம் தேதி இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் இரு அணிகளும் மோதுகின்றன. தற்போது தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இன்று வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும்.
மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியா வந்தபோது, அவர்களால் போட்டியிட முடியாது என்று பலர் நினைத்தார்கள். இருப்பினும், இறுதி ஒருநாள் போட்டியில் 352 ரன்கள் என்ற இலக்கை விரட்டிப் பிடித்து அந்த அணி தங்கள் திறமையை நிரூபித்தது. டி20 தொடரில், இந்தியா இரண்டு போட்டிகளிலும் தோல்வியடையாமல் வெற்றி பெற்று, 2-2 என சமன் செய்தது. இந்த முக்கியமான சூழ்நிலையில், டி20 தொடரை இழக்காமல் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் பொறுப்பு இப்போது இந்திய அணியின் மீது உள்ளது. பிப்ரவரி 2019 முதல் இந்திய மண்ணில் ஒரு டி20 தொடரைக் கூட இழக்காத இந்திய அணி, இந்த சாதனையைத் தக்கவைக்குமா அல்லது மேற்கிந்திய தீவுகள் அணி ஆதிக்கம் செலுத்துமா என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக அமைந்துள்ளது. அதன்படி இன்றைய போட்டி மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
Published On - Oct 17,2026 5:14 PM