AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Yuzvendra Chahal: விவாகரத்துக்கு பிறகு அதீத குடி.. மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை.. மனம் திறந்த சாஹல்!

Yuzvendra Chahal Alcohol Addiction: இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல், தனது கடினமான தனிப்பட்ட வாழ்க்கை பற்றி மனம் திறந்துள்ளார். மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி 26 நாட்கள் மறுவாழ்வு மையத்தில் இருந்ததாகவும், விவாகரத்து மற்றும் பீதி தாக்குதல்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

Yuzvendra Chahal: விவாகரத்துக்கு பிறகு அதீத குடி.. மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை.. மனம் திறந்த சாஹல்!
யுஸ்வேந்திர சாஹல்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 17 Oct 2026 17:46 PM IST

இந்திய அணியின் (Indian Cricket Team) லெக் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல், தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு கடினமான காலகட்டம் குறித்து ஒரு முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளார். மதுப்பழக்கத்திற்கு அடிமையானதாகவும், ​​26 நாட்கள் ஒரு மறுவாழ்வு மையத்தில் இருந்தது மது பழக்கத்தை கைவிட்டதாகவும் தெரிவித்தார், விவாகரத்திற்குப் பிறகு, மனநிலை பெரிதும் பாதிக்கப்பட்டதுடன், அவர் பீதித் தாக்குதல்களால் அவதிப்படத் தொடங்கினார். இந்தநிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ராவின் ‘பைட் அண்ட் பவுல் ‘ பாட்காஸ்டுக்கு அளித்த பேட்டியில், யுஸ்வேந்திர சாஹல் (Yuzvendra Chahal) தனது வாழ்க்கையின் கடினமான காலகட்டம் குறித்துப் பேசியுள்ளார். தற்போது இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ALSO READ: நியூசிலாந்து தொடரில் ட்விஸ்ட்.. இந்திய ஒருநாள் அணிக்கு 2 கேப்டன்களை களமிறங்கிய பிசிசிஐ!

ஓபனாக பேசிய சாஹல்:

தனது குடிப்பழக்கம் குறித்து பேசிய சாஹல், ”நான் ஒரு மறுவாழ்வு மையத்திற்குச் சென்றேன், அங்கு 26 நாட்கள் தங்கியிருந்தேன். இப்போது எனது குடிப்பழக்கத்தை எப்படி நிர்வகிப்பது, என்ன செய்வது, விஷயங்கள் எப்படிச் செயல்படுகின்றன என்பது எனக்குத் தெரியும். இது என் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும், நான் விஷயங்களை நன்றாகப் புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளேன். என் உணர்ச்சிகள் சற்று நிலைபெற்றுள்ளன. அதாவது, உணர்ச்சிகள் இன்னும் இருக்கின்றன, ஆனால் அவை ஒவ்வொரு சிறிய விஷயத்திற்கும் வெளிப்படுவதில்லை. இப்போது என்னால் விஷயங்களைச் சிறப்பாகக் கையாள முடிகிறது.” என்றார்.

மன அழுத்தம்:


மன அழுத்தம் குறித்துப் பேசிய சாஹல் , ‘ மன அழுத்தம் காரணமாக என் இதயம் வேகமாகத் துடிப்பது போல் உணர்கிறேன். பீதி தாக்குதல்களின் போது, ​​என் முகம் மரத்துப் போய்விடும். என்னால் பேசக்கூட முடியாது. சில சமயங்களில், என் உதடுகள் மிகவும் இறுக்கமாகிச் சுருங்கிவிடும், அப்போது எனக்கு ஏதோ சரியில்லை என்பதை யார் வேண்டுமானாலும் எளிதில் அறிந்துகொள்வார்கள்” என்றார்.

ALSO READ: நியூசிலாந்து எதிரான ஒருநாள் தொடர்.. 4 அனுபவ வீரர்களை ஒதுக்கிய பிசிசிஐ!

கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் சாஹல் தனஸ்ரீ வர்மாவைத் திருமணம் செய்துகொண்டார். இதனை தொடர்ந்து கடந்த 2025 மார்ச் மாதம் பரஸ்பர சம்மதத்துடன் இருவரும் விவாகரத்து பெற்றனர். இதன்போது விவாகரத்து குறித்துப் பேசிய சாஹல் , ”விவகாரத்து எனது கிரிக்கெட்டைப் பெரிதாகப் பாதிக்கவில்லை, ஆனால் எனது தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனால், இந்த விஷயத்தை மறந்துவிட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நான் முடிவு செய்தேன். நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் வாழ்க்கையை ரசிக்கிறேன், வெளியே செல்கிறேன், கோ-கார்டிங் மற்றும் கோல்ஃப் விளையாடுகிறேன். முன்பை விட இப்போது நான் ஒரு சிறந்த நிலையில் இருக்கிறேன்’ என்றார்.

Follow Us