AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

TTF Vasan: பிக் பாஸில் டைமண்ட் டாஸ்க்… டிடிஃஎப் வாசனை பாராட்டிய விஜய் சேதுபதி – வைரலாகும் ப்ரோமோ!

TTF Vasan Shines in Bigg Boss 10 Diamond Heist: தமிழ் மக்கள் மத்தியில் அதிகம் விரும்பப்படும் ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருந்துவருவதுதான் பிக் பாஸ். இந்த வாரத்தில் டைமண்ட் ஹெய்ஸ்ட் டாஸ்க்குடன் சிறப்பாக நடைபெற்றுவந்த நிலையில், அந்த டாஸ்கில் டிடிஃஎப் வாசனின் திறமை குறித்து விஜய் சேதுபதி பாராட்டியுள்ள ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

TTF Vasan: பிக் பாஸில் டைமண்ட் டாஸ்க்… டிடிஃஎப் வாசனை பாராட்டிய விஜய் சேதுபதி – வைரலாகும் ப்ரோமோ!
டிடிஃஎப் வாசன் மற்றும் விஜய் சேதுபதிImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 17 Oct 2026 18:14 PM IST

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக இருந்துவருவது பிக் பாஸ் 10 (Bigg Boss Season 10). இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுப்பாளராக தொகுத்துவரும் நிலையில், சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியின் 6வது வாரத்தின் தொடக்கத்தில் டைமண்ட் ஹெய்ஸ்ட் டாஸ்க் மற்றும் டான்ஸ் 10.0 போன்ற டாஸ்குகள் நடைபெற்றுவந்தது. இந்த விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் இந்த டாஸ்க் கொண்டு போனது என கூறலாமா. அந்த விதத்தில் இந்த வாரத்தில் டைமண்ட் ஹெய்ஸ்ட் டாஸ்கில் டிடிஃஎப் வாசன் தனது திறமையை சிறப்பாகவே பயன்படுத்தியிருந்தார். மேலும், நேற்று வெளியான எபிசோடில், டிடிஎப் வாசன் (TTF Vasan) என அவருக்கு லட்சுமி பிரியா விருதை கொடுத்திருந்தார்.

இது குறித்து டிடிஎப் வாசனும் இந்த வாரத்தின் இறுதியில் நான் என்ன பண்ணியிருக்கிறேன் என தெரியும் என அதில் கூறியிருந்தார். அந்த விதத்தில் இன்று (17/10/2026) வெளியான 2வது ப்ரோமோவில், விஜய் சேதுபதி டிடிஃஎப் வாசனை பாராட்டியுள்ளார். தற்போது வெளியான இந்த ப்ரோமோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: மிகவும் தூய்மையான ஒரு பெண்.. ரணபாலி படத்தில் நடித்தது குறித்து ராஷ்மிகா பகிர்ந்த விஷயம்!

டைமண்ட் ஹெய்ஸ்ட் டாஸ்கில் டிடிஃஎப் வாசனை பாராட்டிய விஜய் சேதுபதி:

இந்த டைமண்ட் டாஸ்கில் டிடிஃஎப் வாசன், அந்த வைரத்தை வாரத்தின் ஆரம்பத்திலே திருடியிருந்தார். அந்த வைரத்தை திருடி, பிக் பாஸ் பாத்ரூம் அறையில் உள்ள AC வென்டில் வைத்திருந்தார். மேலும் இன்னொரு டைமண்ட்-ஐ திருடியும் அவர் வைத்திருந்தார். அதில் ஒரு டைமண்ட் மற்ற போட்டியாளர்களுக்கு கிடைத்திருந்த நிலையில், மேலும் ஒரு டைமண்ட் அதே AC வென்டில் இருந்தது. இந்நிலையில் இன்று வார இறுதியான நிலையில், விஜய் சேதுபதி போட்டியாளர்களை சந்தித்துள்ளார்.

இதையும் படிங்க: எளிய மக்களின் வாழ்வியலை சொன்னவர்… – இசையமைப்பாளர் தேவாவின் மறைவிற்கு துணைக் குடியரசுத் தலைவர் இரங்கல்

அப்போது ஒரு மிஸ்டரி பாக்ஸ் ஒன்றை கொடுத்து, அதில் கத்தி வைத்திருந்தார். அதை ஜேசன் திருந்து பார்த்த நிலையில், அந்த கத்தியை டிடிஃஎப் வாசனிடம் கொடுத்து, அந்த வைரத்தை எடுத்துவருமாறு விஜய் சேதுபதி கூறினார். மேலும் தான் ஒழித்து வைத்திருந்த வைரத்தை எடுத்து டிடிஃஎப் வாசனை, விஜய் சேதுபதி வெகுவாக பாராட்டியிருந்தார். மேலும் ரசிகர்களும் கூச்சலிட்டு டிடிஃஎப் வாசனை பாராட்டியிருந்தனர்.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 41வது நாளின் 2வது ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6வது வாரமானது தொடக்கம் முதலே சிறப்பாக ஒளிபரப்பாகிவந்தது. அந்த விதத்தில் இந்த வாரத்தில் டிடிஃஎப் வாசனின் விளையாட்டு மக்கள் மத்தியில் அதிகம் ரசிக்கப்பட்டிருந்தது. மேலும் கடந்த வாரத்தில் எந்த எவிக்ஷனும் இல்லை என்ற நிலையில், இந்த வாரத்தில் டபுள் எவிக்ஷன் இருக்கிறது. அதில் எந்த போட்டியாளர் வெளியேருகிறார் என இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us