பிக் பாஸ் செட்டை டேமேஜ் செய்த கரீஷ்மா.. குற்றவாளி யார் என தேடும் தீவிரத்தில் அன்சர் – வைரலாகும் ப்ரோமோ!
Bigg Boss Tamil 10: மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் தொகுப்பில் தமிழில் நடத்தப்பட்டுவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவரும் நிலையில், இன்று (16/10/2026) வெளியான 3வது ப்ரோமோவில் பிக் பாஸ் செட்-ஐ டேமேஜ் செய்த போட்டியாளர் தேடுதல் குறித்து காட்டப்பட்டுள்ளது.
தமிழில் விஜய் டிவியில் (Vijay Tv) ஒளிபரப்பாகிவரும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் பிக் பாஸ் (Bigg Boss Show). இந்த நிகழ்ச்சியின் சீசன் 10 தமிழில் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. கடந்த 2026ம் ஆனது செப்டம்பர் மாதத்தின் தொடக்கம் முதல், பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) ஆரம்பமான நிலையில், சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியானது ஆரம்பமாகி இன்றுடன் (16/10/2026) கிட்டத்தட்ட 40 நாட்களாகியுள்ளது. அந்த விதத்தில் சுவாரஸ்யமான டாஸ்குகளுடன் இந்த நிகழ்ச்சியானது சிறப்பாக நடைபெற்றுவருகிறது. பிக் பாஸ் வீட்டின் இந்த வாரத்தின் கேப்டனாக அன்சர் (Ansar Bigg Boss) இருந்துவரும் நிலையில், அவரின் கவனிப்பில் இந்த பிக் பாஸ் இல்லம் உள்ளது.
தற்போது டைமென்ட் ஹெய்ஸ்ட் டாஸ்க் மற்றும் டான்ஸ் 10.0 போன்ற டாஸ்குகள் நடந்துவரும் நிலையில், சிறப்பாக இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவருகிறது. அந்த விதத்தில் டைமென்ட் ஹெய்ஸ்ட் டாஸ்கின்போது கரீஷ்மா பிக் பாஸ் வீட்டின் ஷோபா ஒன்றை டேமேஜ் செய்த நிலையில், அது குறித்த விசாரணை பற்றி இந்த பிக் பாஸ் ப்ரோமோ வெளியாகியுள்ளது.




இதையும் படிங்க: குற்றப் பின்னணி.. தனுஷின் ஓம் படத்தின் கதைக்களம் இதுவா? – இணையத்தில் வைரலாகும் தகவல்!
பிக் பாஸ் வீட்டின் ஷோபாவை டேமேஜ் செய்த போட்டியாளர் குறித்த விசாரணையில் அன்சர்:
பிக் பாஸ் வீட்டில் தற்போது வைரம் கொள்ளையடிப்பது தொடர்பான டாஸ்க் மிகவும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. அந்த டாஸ்கின்போது டிடிஃஎப் வாசன் வைரத்தை எடுத்து கிட்டத்தட்ட 1 நாளுக்கும் மேலாக எந்த போட்டியாளருக்கும் தெரியாத வகையில் ஒழித்துவைத்திருந்தார். தற்போது அந்த வைரம் கண்டுபிடிக்கப்பட்டு கைமாறிவரும் நிலையில், கரீஷ்மா அதை மறைத்து வைப்பதற்காக பிக் பாஸ் வீட்டின் ஷோபா ஒன்றை டேமேஜ் செய்திருந்தார்.
இதையும் படிங்க: நா நிஜத்துக்கும் திருடலையே.. அன்சரால் கண்ணீர் விட்ட முனியம்மாள்!
அதை யார் செய்தார் என கண்டுபிடிக்கும் விசாரணையில் அன்சர் இருக்கும் நிலையில், அந்த தவறை தான செய்ததாக கரீஷ்மா இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை. இந்நிலையில் இந்த விராசனை எவ்வாறு இருக்கும் என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 40வது நாளின் 3வது ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:
#Day40 #Promo3 of #BiggBossTamil
Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/pjgZX5oEjy
— Vijay Television (@vijaytelevision) October 16, 2026
தற்போது பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிவருகிறது. மேலும் 6வது வாரத்தின் இறுதியில் இந்த நிகழ்ச்சியானது இருந்துவரும் நிலையில், இந்த வாரம் டபுள் எவிக்ஷன் உள்ளதாம். அந்த விதத்தில் எந்நெந்த போட்டியாளர்கள் வெளியேறுவார்கள் என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.