IND vs WI 5th T20: பெங்களூருவில் மழை அச்சுறுத்தல்.. இந்திய அணி தொடரை வெல்லுமா..?
Bengaluru Weather Forecast T20: இந்தியா வெஸ்ட் இண்டீஸ் 5வது டி20 போட்டி தொடரை தீர்மானிக்கிறது. பெங்களூருவில் அக்டோபர் 17, 2026 அன்று நடைபெற உள்ள இப்போட்டியில் 70% மழைக்கு வாய்ப்புள்ளது. எனினும், சின்னசாமி ஸ்டேடியத்தின் மேம்பட்ட 'சப்-ஏர்' வடிகால் அமைப்பு மழை நின்ற 10-15 நிமிடங்களில் மைதானத்தை உலர்த்தும். இதனால் மழை அச்சுறுத்தல் மத்தியிலும் போட்டி நடைபெற வாய்ப்புள்ளது.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு (IND vs WI) இடையே நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 5வது மற்றும் கடைசி போட்டி நாளை அதாவது 2026 அக்டோபர் 17ம் தேதி பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. 4 போட்டிகளுக்குப் பிறகு தொடர் 2-2 என சமநிலையில் உள்ளது. எனவே, இந்த கடைசி போட்டியே தொடரை வெல்லப்போவது யார் என்பதைத் தீர்மானிக்கும். ஆனால், இந்திய அணிக்கு (Indian Cricket Team) போட்டிக்கு முன்னதாக வெளியான வானிலை நிலவரம் அனைவரின் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. போட்டி நாளன்று பெங்களூருவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, போட்டி நாளன்று பெங்களூருவில் வானிலை எப்படி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்வோம்.
ALSO READ: சொந்த மண்ணில் கம்பேக்! 4 ஆண்டுக்கு பிறகு சின்னசாமி ஸ்டேடியத்தில் களமிறங்கும் புவனேஷ்வர் குமார்..!
IND vs WI இடையேயான 5வது டி20 போட்டியின் வானிலை நிலவரம்:
பிபிசி வானிலை அறிக்கையின்படி, 2026 அக்டோபர் 17ம் தேதியான நாளை பெங்களூருவில் நடைபெறும் போட்டியின் போது மழை பெய்ய 70% வாய்ப்புள்ளது. போட்டி இரவு 7 மணிக்குத் தொடங்கும். அதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு, அதாவது மாலை 5 மணிக்கு, மழை பெய்ய 66% வாய்ப்புள்ளது. அதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, அதாவது மாலை 6 மணிக்கு, மழை பெய்ய 68% வாய்ப்புள்ளது. இதே போக்கின்படி, இரவு 7 மணிக்கு 69%, இரவு 8 மணிக்கு 70%, இரவு 9 மணிக்கு 70%, மற்றும் இரவு 10 மணிக்கு 69% மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே, மழை போட்டியைப் பாதிக்கக்கூடும். போட்டி தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு, அதாவது மாலை 6:30 மணிக்கு டாஸ் நடைபெறும்.




சின்னசாமி ஸ்டேடியத்தில் இப்படி ஒரு சிறப்பம்சமா..?
பெங்களூருவில் சின்னசாமி ஸ்டேடியத்தில் ‘சப்-ஏர்’ வடிகால் அமைப்பைக் கொண்டுள்ளது. இது இந்தியாவில் உள்ள எந்தவொரு கிரிக்கெட் மைதானத்திலும் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இந்த அமைப்பு தண்ணீரை விரைவாக வெளியேற்றுகிறது. மழை நின்ற 10-15 நிமிடங்களுக்குள் மைதானம் முழுவதும் காய்ந்துவிடுகிறது. இது, மழை நின்ற பிறகு ஆட்டம் சீராகத் தொடங்க வழிவகுக்கிறது.
ALSO READ: இந்திய பேட்டிங் தடுமாற்றத்தால் தோல்வியா..? சஞ்சு சாம்சன் விளக்கம்..!
5வது டி20 போட்டிக்கான இந்திய அணி
ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா [துணை கேப்டன்], சிவம் துபே, குல்தீப் யாதவ், அக்சர் படேல், ரவி பிஷ்னாய், நிதிஷ் குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங், மயங்க் யாதவ், பிரின்ஸ் யாதவ், புவனேஷ்வர் குமார்.
5வது டி20 போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி
ஷாய் ஹோப் (விக்கெட் கீப்பர்/கேப்டன்), கமில் பூரன், ஷிம்ரோன் ஹெட்மியர், ரோவ்மேன் பவல், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், குவென்டின் சாம்ப்சன், கீமோ பால், ஷமர் ஸ்பிரிங்கர், ரோஸ்டன் சேஸ், குடாகேஷ் மோட்டி, ஷமர் ஜோசப், அகேல் ஹொசைன், அமீர் ஜாங்கூ, ரொமாரியோ ஷெப்பர்ட்.