AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Suryavanshi Viral Video: ரீல்ஸ் மோகத்தில் வீடியோ எடுத்த நபர்கள்.. எச்சரித்த சூர்யவன்ஷி.. காரணம் என்ன?

Vaibhav Suryavanshi Viral Video: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய கிரிக்கெட் அணி டெல்லி வந்தடைந்தது. விமான நிலையத்தில் புகைப்படக்காரர்களுடன் வைபவ் சூர்யவன்ஷி கடுமையாகப் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி பதக்கம் வென்ற இந்திய வீரர்களை நேரில் சந்தித்து பாராட்டினார்.

Suryavanshi Viral Video: ரீல்ஸ் மோகத்தில் வீடியோ எடுத்த நபர்கள்.. எச்சரித்த சூர்யவன்ஷி.. காரணம் என்ன?
வைபவ் சூர்யவன்ஷி
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 16 Oct 2026 18:18 PM IST

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி நேற்று அதாவது 2026 அக்டோபர் 15ம் தேதி டெல்லி சென்றடைந்தது. இதன்போது, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களை பிரதமர் நரேந்திர மோடி (PM Modi) நேரில் பாராட்டி கௌரவித்தார். இதற்காக, இந்திய அணி டெல்லி விமான நிலையத்தை அடைந்தபோது, ​​வைபவ் சூர்யவன்ஷி ஒரு புகைப்படக்காரரிடம் கடுமையாகப் பேசினார். தற்போது, இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் (2026 Asian Games) தங்கப் பதக்கம் வென்ற இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியுடன் புது டெல்லிக்கு வந்த வைபவ் சூர்யவன்ஷி , அங்கு நடைபெறும் பாராட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கவிருந்தார்.

ALSO READ: ஆசிய விளையாட்டில் பதக்க வேட்டை.. வீரர்களை நேரில் அழைத்து பாராட்டிய பிரதமர் மோடி!

விமான நிலையத்தில், வைபவை புகைப்படக்காரர்கள் சூழ்ந்துகொண்டு புகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுக்கத் தொடங்கினர். கடந்து செல்லும் வாகனங்களிலிருந்து விலகி இருக்குமாறு வைபவ் புகைப்படக்காரர்களுக்குக் கடுமையாக அறிவுறுத்தினார். டெல்லி விமான நிலையத்தில் இருந்த புகைப்படக்காரர்களிடம் வைபவ், “நீங்கள் ரீல்கள் எடுக்கும் ஆர்வத்தில், உங்கள் பின்னாடி வண்டியில் யாராவது மோத போகிறார்கள். கவனத்துடன் இருங்கள்” என்று கூறினார். தற்போது வைபவின் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் சூர்யவன்ஷி வீடியோ:

சூர்யவன்ஷி குறித்து பிரதமர் மோடி கூறியது என்ன..?

மேஜர் தியான் சந்த் ஸ்டேடியத்தில் நடைபெற்ற 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்ற இந்திய வீரர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து ஊக்கப்படுத்தினார். பிரதமர் மோடி கூறுகையில், “இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற பல இந்திய வீரர்கள் 15-17 வயதுக்குட்பட்டவர்கள். இவ்வளவு இளம் வயதிலேயே, இந்த வீரர்கள் தங்களின் சிறப்பான ஆட்டத்தால் நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளனர். அவர்கள் நாட்டு மக்களின் இதயங்களை வென்றுள்ளனர். வெற்றிக்கு வயது வரம்பு இல்லை என்பதை இது காட்டுகிறது. இளம் வயதில் கிரிக்கெட் போன்ற ஒரு விளையாட்டைத் தொடங்குவது ஒரு கூடுதல் நன்மையாகும்” என்றார். இதைக் கேட்டதும் வைபவ் சூர்யவன்ஷியின் முகம் புன்னகையால் மலர்ந்தது.

2026 ஆசிய விளையாட்டின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. மகளிர் கிரிக்கெட் அணியும் தங்கப் பதக்கம் வென்றது. இந்நிகழ்வில் மற்ற போட்டிகளின் போட்டியாளர்களும் கலந்து கொண்டனர். பிரதமர் மோடியும் அவர்களைச் சந்தித்து, புகைப்படம் எடுத்து, அனைவரையும் பாராட்டினார்.

Follow Us