AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வாட்ஸ்அப்பில் வருகிறது 3 முக்கிய பாதுகாப்பு அப்டேட்கள் !

உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தும் மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப்பில் 3 முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பயனர்கள் தங்கள் WhatsApp Introduces New Security Features: வாட்ஸ்அப் கணக்கை லாகின் செய்யும் முறையில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கும் வகையில் இந்த கட்டுப்பாட்டை வழங்கும் வகையில் இந்த புதிய அப்டேட்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

வாட்ஸ்அப்பில் வருகிறது 3 முக்கிய பாதுகாப்பு அப்டேட்கள் !
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 26 Aug 2026 15:10 PM IST

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் அதிகம் பயன்படுத்தும் மெசேஜிங் செயலிகளில் ஒன்று வாட்ஸ்அப். வாட்ஸ்அப் வெறும் மெசேஜிங் செயலியாக மட்டுமல்லாமல் அதனைத்து வேலைகளையும் ஒரே இடத்தில் மேற்கொள்ளும் வகையிலான சூப்பர் ஆப்பாக இருந்து வருகிறது. மேலும் நம் முக்கிய தகவல்கள் வாட்ஸ்அப் வழியாகவே ஷேர் செய்யப்படுகின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வாட்ஸ்அப்பை பாதுகாக்க மேலும் 3 பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது.

பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப் கணக்கை லாகின் செய்யும் முறையில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கும் வகையில் இந்த கட்டுப்பாட்டை வழங்கும் வகையில் இந்த புதிய அப்டேட்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் முக்கியமாக இரண்டு அடுக்கு வெரிஃபிகேஷன், மல்டிபிள் பாஸ்கீஸ், தெரியாக காலர் குறித்த தகவல்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

இதையும் படிக்க : ஏர்டெல் vs ஜியோ – அன்லிமிட்டட் 5 ஜி டேட்டா பிளான் – எதில் விலை குறைவு?

1. கூடுதல் பாஸ்கீ பயன்படுத்தலாம்

வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள முக்கியமான புதிய வசதிகளில் ஒன்று ஒன்றுக்கும் மேற்பட்ட பாஸ்கீ வசதிகள். பாஸ்கீ என்பது வெரிஃபிகேஷன் கோடுக்கு பதிலாக ஃபிங்கர்பிரிண்ட், ஃபேஸ் ஆடி அல்லது போன் ஸ்கிரீன் லாக் போன்ற பாதுகாப்பு முறைகளைப் பயன்படுத்தி வாட்ஸ்அப் கணக்கை லாகின் செய்யும் முறை. இதுவரை இந்த நிலையில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாஸ்கீ அமைத்துக்கொள்ளும் வசதியை வாட்ஸ்அப்பை வழங்குகிறது.

குறிப்பாக ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் என இரண்டு விதமான போன்கள் பயன்படுத்துபவர்களுக்கு இந்த வசதி மிக பயனுள்ளதாக இருக்கும். உதாரணமாக ஒருவர் ஆண்ட்ராய்டு போனிலும், ஐபோன்களிலும் ஒரே வாடஸ்அப் கணக்கை பயன்படுத்தினாலும் இண்டுக்கும் தனித்தனியாக பாஸ்கீகளை அமைத்துக்கொள்ள முடியும். இதன் மூலம் ஒவ்வொரு முறையும் எஸ்எம்எஸ் மூலம் வரும் வெரிஃபிகேஷன் கோடை உள்ளிட வேண்டிய அவசியம் குறையும்.

இதையும் படிக்க : வாட்ஸ்அப்பில் முக்கிய ஏஐ அம்சங்கள் – இது தெரியுமா உங்களுக்கு?

இதற்காக நம் வாட்ஸ்அப் Settings சென்று அதில் Account என்ற பகுதிக்கு சென்று அதில் Passkeys என்ற பகுதிக்கு செல்ல வேண்டும். இதன் மூலம் நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பாஸ்கீகளை அமைத்துக்கொள்ள முடியும்.

2. Two-Step Verification-ல் முக்கிய மாற்றம்

வாட்ஸ்அப் கணக்கிற்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கும் Two-Step Verification வசதியிலும் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்பு இரண்டு அடுக்கு வெரிஃபிகேஷனுக்கு 6 இலக்க பின் ஒன்றை உருவாக்க வேண்டியிருந்தது. இனி அதற்கு பதிலாக முழுமையான பாஸ்வேர்டுகளை உருவாக்கும் வசதியை வாட்ஸ்அப் வழங்குகிறது. இந்த பாஸ்வேர்களில் எழுத்துகள், எண்கள் மற்றும் ஸ்பெஷல் கேரக்டர்களை உருவாக்க முடியும். இந்த பாஸ்வேர்டு மிக நீளமாக இருக்கும் என்பதால் அதனை எளிதில் ஒருவரால் கண்டுபிடிக்க முடியாது.

3. தெரியாத நம்பர்களில் இருந்து வரும் கால்களுக்கு கூடுதல் தகவல்

வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள மற்றொரு முக்கிய வசதி தெரியாத கால்கள் குறித்து கூடுதல் தகவல் காட்டப்பட்டும், குறிப்பாக அந்த எண் வெளிநாட்டை சேர்ந்ததா? வாட்ஸ்ப் குரூப்பில் அந்த எண் இடம்பெற்றுள்ளதா உள்ளிட்ட தகவல்கள் காட்டப்பட்டும். அதனை வைத்து அந்த தகவல்களை ஏற்றுக்கொள்வதா அல்லது தவிர்க்கலாமா என தெரிந்துகொல்ள முடியும். குறிப்பாக தெரியாத எண்களில் இருந்து வரும் சந்தேகத்துக்குரிய கால்கள் குறித்து பயனர்கள் அறிந்துகொள்ள உதவியாக இருக்கும்.

 

Follow Us