UPI : யுபிஐ-ல் Transaction Fail ஆகிவிட்டதா.. கவலை வேண்டாம்.. சுலபமாக திம்ப பெற்றுக்கொள்ளலாம்!
How To Get Money From Failed UPI Transaction | யுபிஐ செயலிகளை பயன்படுத்தி பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் பட்சத்தில் சில சமயங்களில் பரிவர்த்தனை தோல்வியில் முடியும். இந்த நிலையில், தோல்வியில் முடிந்து சிக்கிக்கொள்ளும் பணத்தை எப்படி எடுப்பது என தெரியுமா?
தற்போதைய காலக்கட்டத்தில் கையில் பணம் வைத்து செலவு செய்யும் பழக்கம் பொதுமக்கள் மத்தியில் குறைந்துள்ளது. பெரும்பாலானோர் யுபிஐ (UPI – Unified Payment Interface) மூலம் தான் தங்களது அன்றாட பண பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு யுபிஐ மூலம் பண பரிவர்த்தனை செய்வதன் மூலம் சில சிக்கல்களை பொதுமக்கள் எதிர்க்கொள்கின்றனர். அதில் முக்கியமான சிக்கல் தான், பண பரிவர்த்தனை தோல்வியடைந்து, பணம் சிக்கிக்கொள்வது. இத்தகைய சூழலில் சிக்கிக்கொண்ட பணத்தை எடுப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
Transaction Failed சிக்கலை எதிர்க்கொள்ளும் பொதுமக்கள்
யுபிஐ செயலிகள் மூலம் பண பரிவர்த்தனை மேற்கொள்ளா வேண்டும் என்றால் சீரான நெட்வொர்க் வசதி வேண்டும். ஒருவேளை நெட்வொர்க் வசதி சரியாக இல்லை என்றால் பண பரிவர்த்தனை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படலாம். சில சமயங்களில் பண பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டு இருக்கும். ஆனால், யுபிஐ செயலியில் Transaction Failed என காட்டும். இத்தகைய சூழலில் பலரும் தங்களது பணம் திரும்ப வராது என நினைத்து அச்சமடைவர். ஆனால், அதற்கெல்லாம் அவசியமே இல்லை. Transaction Fail ஆனாலும், சிக்கிக்கொண்ட பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.
இதையும் படிங்க : ரூ.1க்கு புதிய சிம் – அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் தினசரி டேட்டா – பிஎஸ்என்எல்லின் சுதந்திர தின ஆஃபர்
சிக்கிக்கொண்ட பணத்தை யுபிஐ மூலம் எடுப்பது எப்படி?
பொதுவாக Transaction Fail ஆகும்போது, பணம் தானாகவே வங்கி கணக்கிற்கு வந்துவிடும். அவ்வாறு பணம் தானாகவே வங்கி கணக்கிற்கு வர, நேஷனல் கார்பரேஷன் ஆஃப் இந்தியா மற்றும் வங்கிகள் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. ஆனால், ஒருசில நேரத்தில் பணம் வங்கி கணக்கிற்கு வராது. இத்தகைய சூழலில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
இதையும் படிங்க : எலக்ட்ரிக் வாகனங்கள் வைத்திருக்கிறீர்களா? சரியான முறையில் சார்ஜ் செய்வது எப்படி?
UIDR மூலம் பணத்தை திரும்ப பெறலாம்
ஒவ்வொரு யுபிஐ செயலியிலும் யுஐடிஆர் (UIDR – Unified Dispute and Issue Resolution) என்ற வசதி இருக்கும். இந்த ஆப்ஷனை பயன்படுத்தி, மிக சுலபமாக ரீஃபண்ட் பெறலாம். அதற்கு முதலில் யுபிஐ செயலியை திறந்து Transaction History என்ற பக்கத்திற்கு செல்ல வேண்டும். அங்கு Check Status அல்லது Raise Issue என்ற ஆப்ஷன் இருக்கும். இதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து, சிக்கலுக்கு தீர்வு காணலாம்.


