AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஒன்பிளஸ் நோர்டு 6 ஸ்மார்ட்போனுக்கு ரூ.11,000 தள்ளுபடி.. சலுகைகளை வாரி வழங்கும் ஒன்பிளஸ்!

OnePlus Nord 6 Smartphone Discount | அமேசான், பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள் சுதந்திர தின சேலை நடத்தி வரும் நிலையில், ஒன்பிளஸ் நிறுவனமும் தனது ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடிகளை வழங்கியுள்ளது. அந்த வகையில், ஒன்பிளஸ் நோர்டு 6 ஸ்மார்ட்போனுக்கு ரூ.11,000 தள்ளுபடி வழங்கியுள்ளது.

ஒன்பிளஸ் நோர்டு 6 ஸ்மார்ட்போனுக்கு ரூ.11,000 தள்ளுபடி.. சலுகைகளை வாரி வழங்கும் ஒன்பிளஸ்!
ஒன்பிளஸ் நோர்டு 6 ஸ்மார்ட்போன்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 12 Aug 2026 15:53 PM IST

அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) ஆகிய நிறுவனங்கள் தங்களின் ப்ரீடம் சேலை (Freedom Sale) நடத்தி வருவதை போலவே, சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனமும் சலுகைகளை வழங்கி வருகிறது. இந்த சேலில், ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அட்டகாசமான சலுகைகள் மற்றும் தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த வகையில், ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் நோர்டு 6 ஸ்மார்ட்போனுக்கு (OnePlus Nord 6 Smartphone) ரூ.11,000 வரை தள்ளுபடி வழங்கியுள்ளது. ஒன்பிளஸின் இந்த அதிரடி தள்ளுபடி குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஒன்பிளஸ் நோர்டு 6 ஸ்மார்ட்போனுக்கு அசத்தல் தள்ளுபடி

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஒன்பிளஸ் நோர்டு 6 ஸ்மார்ட்போன் தற்போது ஒன்பிளஸ் இணையதளத்தில் ரூ.44,499-க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.52,999-க்கு அறிமுகமான நிலையில், தற்போது ரூ.8,500 குறைவாக பட்டியலிடப்பட்டுள்ளது. இதுதவிர சுதந்திர தின சிறப்பு சலுகையான ஒன்பிளஸ் நிறுவனம் ரூ.2,500 கூடுதல் உடனடி தள்ளுபடி வழங்குகிறது. இதன் மூலம் மொத்த ரூ.11,000 தள்ளுபடியில் இந்த ஸ்மார்ட்போனை வாங்கிக்கொள்ளலாம்.

இதையும் படிங்க : அமேசான் – ஃபிளிப்கார்ட் வழங்கும் தள்ளுபடிகள் உண்மையா? எப்படி கண்டுபிடிப்பது?

இரண்டு முறை விலை உயர்த்தப்பட்ட ஸ்மார்ட்போன்

ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, கோடக் மஹிந்திரா மற்றும் ஐடிஎஃப்சி வங்கிகளின் கார்டுகளை பயன்படுத்தி வாங்கினால் இந்த உடனடி சலுகையான ரூ.2,500 பெற முடியும். இந்த ஸ்மார்ட்போன் ரூ.42,000-க்கு தான் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், சமீப காலமாக நிலவி வரும் மெமரி சிப் சிக்கல்கள் காரணமாக இந்த ஸ்மார்ட்போனின் விலை இரண்டு முறை விலை உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக தான் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.52,999 ஆக இருக்கிறது. இந்த நிலையில், ஒன்பிளஸின் இந்த சலுகையை பயன்படுத்தி பழைய விலைக்கே இந்த ஸ்மார்ட்போனை வாங்கிக்கொள்ள முடியும்.

இதையும் படிங்க : ஸ்மார்ட்போன்கள் முதல் கேட்ஜெட்ஸ் வரை.. அமேசான் கிரேட் ப்ரீடம் சேலில் கிடைக்கும் சலுகைகள் என்ன என்ன?

ஒன்பிளஸ் நோர்டு 6 – சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

இந்த ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் 1.5K AMLOED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8எஸ் கென் 4 பிராசசர் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த அட்டகாசமான அம்சங்களை கொண்டுள்ள ஸ்மார்ட்போன் அசத்தல் சலுகையுடன் விற்பனை செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Follow Us