ஐபோன்களுக்கு தள்ளுபடியை வாரி வழங்கும் பிளிப்கார்ட் ப்ரீடம் சேல்!
iPhone Offers In Flipkart Freedom Sale | பிளிப்கார்ட் நிறுவனத்தின் ப்ரீடம் சேல் நாளை (ஆகஸ்ட் 08, 2026) தொடங்க உள்ளது. இந்த சேலில், பிளிப்கார்ட் நிறுவனம் ஐபோன்களுக்கு அசத்தல் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை வழங்குகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியா விரைவில் தனது 80வது சுதந்திர தின விழாவை கொண்டாட உள்ள நிலையில், பல்வேறு நிறுவனங்கள் தங்களது ப்ரீடம் சேலை (Freedom Sale) அறிவித்து வருகின்றன. அந்த வகையில், உலகின் மிகப்பெரிய இ காமர்ஸ் (e Commerce) நிறுவனங்களான பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் அமேசான் (Amazon) ஆகிய நிறுவனங்களும் தங்களது ப்ரீடம் சேலை அறிவித்துள்ளன. அந்த வகையில், பிளிப்கார்ட் நிறுவனமும் தனது ப்ரீடம் சேலை (Flipkart Freedom Sale) அறிவித்துள்ளது. சாதரண பயனர்களுக்கு இந்த சேல் சலுகைகள் நாளை (ஆகஸ்ட் 08, 2026) முதல் கிடைக்கும் நிலையில், பிளிப்கார்ட் பிளஸ் பயன்படுத்தும் பயனர்கள் இன்று (ஆகஸ்ட் 07, 2026) முதலே சேல் சலுகைகளை பெற்றுக்கொள்ளலாம். இந்த நிலையில், பிளிப்கார்டின் இந்த ப்ரீடம் சேல் குறித்து விரிவாக பார்க்கலாம்.
பிளிப்கார்ட் ப்ரீடம் சேல் – சிறப்பு தள்ளுடிகள் மற்றும் சலுகைகள்
பிளிப்கார்ட் நிறுவனம் தனது ப்ரீடம் சேலை தொடங்கியுள்ள நிலையில், இதில் ஸ்மார்ட்போன்கள், மின்சாதன பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்திற்கும் அசத்தல் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில், பிளிப்கார்டின் இந்த சேலில் எந்த எந்த ஸ்மார்ட்போன்களுக்கு எவ்வளவு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது என பார்க்கலாம்.
இதையும் படிங்க : அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமானது விவோ எஸ்2 ஸ்மார்ட்போன்.. முக்கிய அம்சங்கள் என்ன என்ன?




ஐபோன் ஏர்
நீங்கள் மிகவும் மெல்லிய தோற்றம் கொண்ட ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என நினைத்தால் உங்களுக்கு ஏர் ஸ்மார்ட்போன் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் ரூ.1,19,900 வரை விற்பனை செய்யப்படும் நிலையில், பிளிப்கார்டின் இந்த சேலில் ரூ.97,900-க்கு வாங்கிக்கொள்ளலாம்.
ஐபோன் 17 ப்ரோ
உங்களுக்கு ப்ரோ லெவல் அனுபவம் வேண்டும் என்றால் நீங்கள் ஆப்பிள் 17 ப்ரோ ஸ்மார்ட்போனை தேர்வு செய்யலாம். இந்த ஸ்மார்ட்போன் ரூ.1,34,900 வரை விற்பனை செய்யப்படும் நிலையில், பிளிப்கார்ட் சேலில் வெறும் ரூ.1,22,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க : ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோவை ரூ.90,000-க்கு வாங்கிக்கொள்ளலாம்.. பிளிப்கார்டின் இந்த டீலை மிஸ் பண்ணிடாதீங்க!
இபோன் 16
நீங்கள் சற்று விலை குறைவான ஸ்மார்ட்போனை வாங்க நினைத்தால் உங்களுக்கு ஐபோன் 16 ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். ரூ.69,900 வரை விற்பனை செய்யப்படும் இந்த ஸ்மார்ட்போன், பிளிப்கார்ட் சேலில் வெறும் ரூ.61,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.