AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் 1.20 லட்சம் கேப்களை அறிமுகம் செய்யும் ஊபர்.. இந்தியாவில் புதிய சாதனை!

Uber To Introduce Driverless Cabs In India | துபாய், சீனா உள்ளிட்ட உலக நாடுகளில் உள்ளதை போலவே இந்தியாவிலும் ஓட்டுநர் இல்லாத கார்களை ஊபர் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. ஊபர் நிறுவனத்தின் இந்த அட்டகாசமான முயற்சி குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் 1.20 லட்சம் கேப்களை அறிமுகம் செய்யும் ஊபர்.. இந்தியாவில் புதிய சாதனை!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 05 Aug 2026 21:10 PM IST

இந்தியாவில் மிக சுலபமாக, இருக்கும் இடத்திற்கே வாகனங்களை வரவழைத்து பயணம் செய்ய சேவையை ஓலா (Ola), ஊபர் (Uber) உள்ளிட்ட நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இந்த சேவைகளை பயன்படுத்தி ஏராளமான பயனர்கள் தினசரி பயணம் செய்கின்றனர். இந்த நிலையில், ஊபர் நிறுவனம் ஒரு புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது. அதாவது, ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் கேப்களை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த நிலையில், ஓலா நிறுவனத்தின் இந்த புதிய நடவடிக்கை குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஓட்டுநர் இல்லாத கார்களை அறிமுகம் செய்யும் ஊபர்

முன்பு ஒரு வாகனத்தை இயக்க வேண்டும் என்றால் ஓட்டுநர் தேவை. ஆனால், தற்போது அதற்கெல்லாம் அவசியமே இல்லை. ஓட்டுநர் இல்லாமலே கூட பயணம் செய்யும் Self Driving அம்சம் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. துபாய், சீனா உள்ளிட்ட உலக நாடுகளில் இந்த அம்சம் பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் தான், ஊபர் நிறுவனம் இந்த அம்சத்தை இந்தியாவில் அறிமுகம் செய்யும் முயற்சியை கையில் எடுத்துள்ளது.

இதையும் படிங்க : WhatsApp : வயதை கேட்கும் வாட்ஸ்அப்.. Age Restriction அம்சத்தை அறிமுகம் செய்ய திட்டம்?

ஊபர் நிறுவனம் சுமார் 10 பில்லியன் மதிப்பில் இந்த திட்டத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது, இந்திய மதிப்பில் சுமார் ரூ.95,000 கோடியில் மொத்தம் 1,20,000 ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் கார்களை அறிமுகம் செய்ய உள்ளது. டெஸ்லா உள்ளிட்ட உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் செயல்படுத்தி வரும் இந்த ரோபோ டேக்ஸி நெட்வொர்க் அம்சத்தை தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்ய ஊபர் திட்டமிட்டுள்ளது.

15 நகரங்களில் இந்த திட்டத்தை அறிமுகம் செய்ய திட்டம்

2026 ஆம் ஆண்டு 15 நகரங்களில் இந்த திட்டத்தை அறிமுகம் செய்ய ஊபர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஓட்டுநர் இல்லாத கார்களை இயக்கும் துறையில் மிகப்பெரிய நிறுவனமாக உயரும் நோக்கில் ஊபர் பயணம் செய்துக்கொண்டு உள்ளது. இதுவரை இந்தியாவில் இந்த சேவை இல்லாத நிலையில், முதல் முறையாக இந்த சேவையை ஊபர் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us