AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மின்சார ஸ்கூட்டரை கழுவும்போது உஷார்… இந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க

.  பெட்ரோல் ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடும்போது இவற்றின் பராமரிப்புச் செலவு குறைவு என்றாலும், இவற்றைக் கையாளும்போது சிறப்பு கவனம் தேவை. வாகனத்தைக் கழுவும்போதுதான் மிக அதிக கவனம் தேவைப்படுகிறது. எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களைப் பாதுகாப்பாக எப்படிக் கழுவுவது என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

மின்சார ஸ்கூட்டரை கழுவும்போது உஷார்… இந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 31 Jul 2026 21:44 PM IST

இன்று பெரும்பாலான மக்களின் அன்றாட வாழ்வில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஒரு அங்கமாகிவிட்டன. பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில் மக்கள் பலரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை நாட தொடங்கியிருக்கிறார்கள். மேலும் இது சுற்றுச்சூழல் மாசடைதலையும் வெகுவாக குறைக்கும் என்பதால் இது சிறந்த தேர்வாக பார்க்கப்படுகிறது.  பெட்ரோல் ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடும்போது இவற்றின் பராமரிப்புச் செலவு குறைவு என்றாலும், இவற்றைக் கையாளும்போது சிறப்பு கவனம் தேவை. வாகனத்தைக் கழுவும்போதுதான் மிக அதிக கவனம் தேவைப்படுகிறது. எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களைப் பாதுகாப்பாக எப்படிக் கழுவுவது என்று பார்ப்போம்.

பெட்ரோல் ஸ்கூட்டரை கழுவும்போது கவனிக்க வேண்டியவை

எலக்ட்ரிக் ஸ்கூட்டரைக் கழுவுவதற்கு முன் அதன் மின் இணைப்பை முறையாக அணைக்க வேண்டும். சார்ஜ் ஏறிக் கொண்டிருக்கும்போது ஒருபோதும் வாகனத்தைக் கழுவக்கூடாது. சார்ஜிங் போர்ட்டின் மூடி முழுமையாக மூடப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். வாகனம் ஓட்டி வந்த உடனேயே அதைக் கழுவக்கூடாது. பேட்டரி மற்றும் மோட்டார் ஆகியவை நன்கு குளிர்ந்த பிறகு கழுவ வேண்டும். சுவிட்சுகள் மற்றும் சார்ஜிங் போர்ட்கள் மீது நேரடியாகத் தண்ணீரைச் பீய்ச்சி அடிக்கக்கூடாது.

இதையும் படிக்க : உங்கள் வைஃபை இணைய வேகம் குறையுதா?.. சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள்!

அதிக அழுத்தத்துடன் தண்ணீரைச் செலுத்தக்கூடாது. முடிந்தவரை ‘பிரஷர் வாஷர்’ போன்ற அதிக அழுத்தத்துடன் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் கருவிகளைப் பயன்படுத்தாமல் கழுவுவது நல்லது. ஏனெனில், ஏதேனும் காரணத்தால் உட்புற பாகங்களுக்குள் தண்ணீர் சென்றால், அவை ஷார்ட் சர்க்யூட் ஆகி பழுதடைய வாய்ப்புள்ளது. பேட்டரி பேக், மோட்டார் மற்றும் கன்ட்ரோலர் உள்ள பாகங்களின் மீது நேரடியாகத் தண்ணீரை ஊற்றக்கூடாது. வாகனத்தை சென்டர் ஸ்டாண்ட்டில் நிறுத்தி வைத்துக் கழுவுவது சிறந்தது. ஹப் மோட்டார் உள்ள பகுதியில் அதிக சேறு படிந்திருந்தால், அதை ஒரு பிரஷ் மூலம் அகற்றுவது நல்லது.

ஸ்கூட்டரில் பெல்ட் டிரைவ் அமைப்பு இருந்தால், அங்கேயும் அதேபோல பிரஷ்ஷைப் பயன்படுத்துவது சிறந்தது. அந்த மாடலில் டிஸ்க் பிரேக்குகள் இருந்தால், அப்பகுதியைக் கழுவும்போது கூடுதல் கவனம் தேவை. வீட்டில் பயன்படுத்தும் சாதாரண ஷாம்பு அல்லது சோப்பைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். வாகனங்களைக் கழுவுவதற்கான பிரத்யேக ஷாம்பு இல்லையென்றால், வெறும் தண்ணீரை ஊற்றியே அப்பகுதியைச் சுத்தம் செய்யலாம்.

இதையும் படிக்க : கூகுள் பாஸ்வேர்டை மறந்துட்டிங்களா? இனி செல்ஃபி மூலம் லாகின் செய்யலாம்! – எப்படி தெரியுமா?

கழுவிய உடனேயே ஸ்கூட்டரை இயக்க முயற்சிக்காதீர்கள். வாகனத்தின் சுவிட்ச் பகுதி, சாவி துளை மற்றும் சார்ஜிங் போர்ட் பகுதி ஆகியவற்றை மைக்ரோஃபைபர் துணியால் துடைக்க வேண்டும். அதன் பிறகு, ஸ்கூட்டரை குறைந்தது பத்து நிமிடங்களாவது அப்படியே விட்டுவிட வேண்டும்.

Follow Us