இனி யுபிஐ செயலிகளில் முழு மொபைல் எண் தெரியாது.. விரைவில் அமலுக்கு வரும் முக்கிய அம்சம்!
New Safety Feature For UPI | யுபிஐ பயன்படுத்தி பண பரிவர்த்தனை செய்வது இந்தியர்கள் மத்தியில் மிகவும் பரவலாக காணப்படுகிறது. இந்த நிலையில், யுபிஐ பண பரிவர்த்தனைகளில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் நிலையில், பயனர்களின் பாதுகாப்புக்காக மேலும் ஒரு புதிய அம்சம் அறிமுகமாக உள்ளது.
இந்தியா முழுவதும் யுபிஐ (UPI – Unified Payment Interface) பண பரிவர்த்தனை பரவலாக பயன்படுத்தப்படுகிறது. சிறிய கடைகள் முதல் பெரிய வணிக வளாகங்கள் வரையும், நகரங்கள் முதல் சிறிய கிராமங்கள் வரையும் என அனைத்து இடங்களில் யுபிஐ பண பரிவர்த்தனை புழக்கத்தில் உள்ளது. இவ்வாறு அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் முக்கிய அம்சமாக இந்த யுபிஐ பண பரிவர்த்தனை மாறி வரும் நிலையில், அது தொடர்பான பல்வேறு முக்கிய மாற்றங்களை இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI – National Payment Corporation Of India) மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், யுபிஐ செயலிகளை பயன்படுத்தும் பயனர்களின் தனியுரிமையை பாதுகாக்கும் வகையில், தேசிய கொடுப்பனவு கழகம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
யுபிஐ பண பரிவர்த்தனை – என்சிபிஐ வெளியிட்ட வழிகாட்டுதல்கள்
இந்தியாவில் கூகுள் பே, போன் பே உள்ளிட்ட பல்வேறு யுபிஐ செயலிகள் உள்ளன. இந்த செயலிகளை பயன்படுத்தி நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் பண பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், யுபிஐ பயன்படுத்தும் பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய தேசிய கொடுப்பனது கழகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதாவது, Moneycontrol வெளியிட்டுள்ள செய்தியில் செப்டம்பர் 04, 2026-க்குள் வங்கிகள் மற்றும் செயலிகள் தேவையான தொழில்நுட்ப மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ஏஐ கணக்குகளை கண்டறிய Human Verification Badge அறிமுகம் செய்த ஃபேஸ்புக்.. சிறப்பு அம்சம் என்ன?
முழு மொபைல் எண் திரையில் தோன்றாது
இந்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அமலுக்கு வரும் பட்சத்தில் பயனர்களின் முழு மொபைல் எண் திரையில் தோன்றாது. அதாவது, யுபிஐ மூலம் பணம் அனுப்பும்போதோ அல்லது பெறும்போதோ அவர்களின் முழு மொபைல் எண்களும் தோன்றாது. அதற்கு பதிலாக மொபைல் எண்ணின் கடைசி நான்கு எண்கள் மட்டுமே திரையில் தோன்றும்.
இதையும் படிங்க : கூகுள் பாஸ்வேர்டை மறந்துட்டிங்களா? இனி செல்ஃபி மூலம் லாகின் செய்யலாம்! – எப்படி தெரியுமா?
இந்த மாற்றத்தின் முக்கிய நோக்கம் பயனர்களின் தனியுரிமையை பாதுகாப்பதாக உள்ளது. இவ்வாறு முழு மொபைல் எண்கள் திரையில் தெரியாமல் இருப்பது, தேவையில்லாமல் தனிப்பட்ட தகவல்கள் பகிரப்படுவதை தடுக்கும் என கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.