பொருளை வாங்கிக்கொண்டு பொறுமையாக கட்டணம் செலுத்தலாம்.. Pay Later அம்சத்தை அறிமுகம் செய்த பிளிப்கார்ட்!
Flipkart Introduced Pay Later Feature | உலகின் மிகப்பெரிய இ காமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றாக உள்ள பிளிப்கார்ட் தனது பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது பொருட்களை வாங்கிக்கொண்டு கட்டணத்தை பிறகு செலுத்தும் பே லேட்டர் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.
தற்போதைய சூழலில் இந்திய பொதுமக்கள் மத்தியில் மாத தவணை (EMI – Every Month Installment) முறை தான் பரவலாக காணப்படுகிறது. ஒரு பொருளை வாங்கிவிட்டு அதற்கு மாதம் மாதம் கட்டணம் செலுத்துவது என்பது நிதி சுமையை குறைப்பதாக கருதம் பொதுமக்கள் இந்த மாத தவணை முறையை பயன்படுத்துகின்றனர். வீட்டு உபயோக பொருட்கள், மின்சாதன பொருட்கள், வீடு, நிலம் என அனைத்தும் மாத தவணை முறையில் கிடைக்கின்றது. இந்த நிலையில் தான், உலகின் மிகவும் பிரபலாமகா இ காமர்ஸ் (e Commerce) நிறுவனமாக பிளிப்கார்ட் (Flipkart) நிறுவனமும் இந்த மாத தவணை முறையை கையில் எடுத்துள்ளது.
மாத தவணை முறையை அறிமுகம் செய்யும் பிளிப்கார்ட்
பிளிப்கார்ட் நிறுவனத்தின் ஃபிரீடம் சேல் (Flipkart Freedom Sale) விரைவில் தொடங்க உள்ளது. ஓவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் அன்று பிளிப்கார்ட் இந்த சேலை நடத்தும். அந்த வகையில் , 2026 ஆம் ஆண்டுக்கான சுதந்திர தினத்துக்காகவும் இந்த சேலை நடத்தும் பணிகளை பிளிப்கார்ட் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தான், பிளிப்கார்ட் பே லேட்டர் (Flipkart Pay Later) அம்சத்தை அந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இதையும் படிங்க : Gold : 18 காரட் தங்கத்திற்கு நகைக் கடன் கிடைக்குமா?.. தெரிந்துக்கொள்ளுங்கள்!




பொருளை வாங்கிக்கொண்டு மாத தவணையில் கட்டணம் செலுத்தலாம்
இந்த அம்சத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கிக்கொண்டு, மாத தவணை முறையில் திருப்பி செலுத்தலாம். இந்த அம்சத்தை பார்ட்னர்ஷிப் உடன் பிளிப்கார்ட் அறிமுகம் செய்துள்ளது. அதாவது, பிளிப்கார்ட், மின்த்ரா மற்றும் பிளிப்கார்ட் மினியூட்ஸ் ஆகியவற்றின் மூலம் இந்த அம்சத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த அம்சத்தை பயன்படுத்தி அத்தியாவசிய பொருட்கள், விலை உயர்ந்த மின்சாதன பொருட்கள் ஆகியவற்றை வாங்கிக்கொள்ள முடியும்.
இதையும் படிங்க : இன்னும் ஒரு நாள் தான் இருக்கு.. ஜூலை 31-க்குள் இதை செய்யவில்லை என்றால் இலவச அரிசி கிடைக்காது!
மூன்று வழிகளில் பேமெண்ட் செய்யலாம்
பிளிப்கார்டின் இந்த பே லேட்டர் அம்சத்தை பயன்படுத்தி மூன்று வழிகளில் பணம் செலுத்தலாம். இந்த அம்சம் பயனர்கள் பணத்தை திருப்பி செலுத்த மொத்தம் 30 நாட்கள் கால அவகாசம் வழங்குகிறது. இந்த மூன்று ஆப்ஷன்கள் மூலம், கட்டணத்தை மூன்று சம பங்காக பிரித்து செலுத்த முடியும். அதிக மதிப்பு கொண்ட பொருட்களை வாங்கினால் மூன்று முதல் 12 மாதங்கள் வரை பிளிப்கார்ட் மாத தவணை வழங்குகிறது குறிப்பிடத்தக்கது.