இனி தட்கட் டிக்கெட் முன்பதிவுக்கு டோக்கன்.. ஆகஸ்ட் 1 முதல் வரும் புதிய நடைமுறை.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
Token System In Tatkal Ticket Booking | இந்திய ரயில்வேயில் தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் நின்று காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இந்த நிலையில் தான், தட்கெட் டிக்கெட் முன்பதிவு முறையை ஒழுங்குப்படுத்த டோக்கன் முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்திய ரயில்வே (Indian Railway) தனது சேவைகளில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தட்கல் டிக்கெட் (Tatkal Ticket Booking) முன்பதிவு முறையில் பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. 2025 ஆம் ஆண்டு தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் எண் கட்டாயம் என மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் தான் தற்போது தட்கல் டிக்கெட் முன்பதிவு முறைக்கு டோக்கன் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அது என்ன டோக்கன் முறை, அது எப்படி செயல்படும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தட்கல் டிக்கெட் முன்பதிவு
தட்கட் டிக்கெட்டை பயணத்திற்கு முந்தைய நாள் முன்பதிவு செய்ய வேண்டும். இந்த டிக்கெட்டை ஆன்லைன் மூலமாகவும், நேராக ரயில் நிலையங்களுக்கு சென்றும் டிக்கெட் கவுண்டர்களில் பெறலாம். இந்த முறையில் பயணிகள் பல்வேறு சிறமங்களை எதிர்க்கொண்டு வந்த நிலையில், இந்திய ரயில்வே ஒரு முக்கிய மாற்றத்தை மேற்கொண்டுள்ளது. அந்த மாற்றம் ஆகஸ்ட் 01, 2026 முதல் அமலுக்கு வர உள்ளது.
இதையும் படிங்க : கடந்த ஆண்டுக்கான வருமான வரியை இந்த ஆண்டு செலுத்தலாமா?.. வருமான வரித்துறை விதிகள் கூறுவது என்ன?
டோக்கன் முறையை அறிமுகம் செய்த இந்திய ரயில்வே
தட்கல் டிக்கெட்டை கவுண்டர்களில் பெய பயணிகள் ரயில் நிலையங்களில், நீண்ட வரிசையில் சில மணி நேரங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இந்த நிலையில், பொதுமக்கள் வரிசையில் நிற்கும் சவாலை தவிர்க்கவும், கூட்ட நெரிசலை குறைக்கவும், முறையான டோக்கன் வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் டிக்கெட் வழங்கும் அம்சத்தை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.
இதையும் படிங்க : பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் சிக்கன் பிரியாணி.. ஆகஸ்ட் 5 பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு வெளியாகுமா?
டோக்கன் வழங்கப்படும் நேரம்
ஏசி வகுப்பு தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு காலை 8.30 மணி முதல் 9 மணி வரை டோக்கன்கள் வழங்கப்படும். ஏசி அல்லாத வகுப்பு தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு காலை 9 மணி முதல் 9.30 மணி வரை டோக்கன் வழங்கப்படும். முதல் ஒவ்வொரு கவுண்டரிலும் ஏசி பெட்டிகளுக்கு 10 டோக்கன்களும், ஏசி அல்லாத வகுப்புகளுக்கு 15 டோக்கன்களும் வழங்கப்பட உள்ளன. தேவைக்கு ஏற்ப இந்த எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படலாம் என ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.