Gold : 18 காரட் தங்கத்திற்கு நகைக் கடன் கிடைக்குமா?.. தெரிந்துக்கொள்ளுங்கள்!
Can You Get Gold Loan For 18K Gold Jewellery | தங்கத்தை வைத்து கடன் வாங்குவது இந்தியர்கள் மத்தியில் மிகவும் பரவலாக உள்ளது. இந்த நிலையில், 18 காரட் தங்கத்தை அடகு வைத்து தங்க நகைக் கடன் வாங்க முடியுமா என்பது குறித்து பார்க்கலாம்.
தங்கம் (Gold) என்பது மனிதர்களின் வாழ்வில் மிக முக்கிய அம்சமாக உள்ளது. இந்தியர்கள் ஏதேனும் சுப காரியங்கள் செய்ய வேண்டும் என்றால் ஒரு பொட்டு தங்கத்தையாவது பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். தங்கம் இந்தியர்களின் பாரம்பரியமாக மட்டுமன்றி, சிறந்த முதலீடாகவும் உள்ளது. கையில் கொஞ்சம் பணம் இருந்தாலும் கூட அதனை வைத்து நகை வாங்கி முதலீடு செய்ய வேண்டும் என்று தான் பலரும் நினைப்பர்.
அவ்வாறு தங்கத்தில் முதலீடு செய்து, தங்களது தேவைகளின்போது அந்த தங்கத்தை அடகு வைத்தும் அவர்கள் நிதி சிக்கல்களை தீர்த்துக்கொள்வர். இதன் காரணமாக தான் இந்தியர்கள் மத்தியில் தங்க கடன் மிகவும் பிரபலமாக உள்ளது. இந்த நிலையில், 18 காரட் தங்கத்தை அடகு வைத்து தங்க நகைக் கடன் வாங்கலாமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
18 காரட் தங்கத்துக்கு தங்க நகைக் கடன் கிடைக்குமா?
தங்கம் சில வெவ்வேறு வகைகளில் விற்பனை செய்யப்படும். அதாவது, 18 காரட், 22 காரட் மற்றும் 24 கார்ட் என விற்பனை செய்யப்படும். இதில் 24 காரட் தங்கம் தூய்மையான தங்கம் என்பதால் அது சற்று கூடுதல் விலைக்கு விற்கப்படும். அதற்கு பிறகு 22 காரட் தங்கம் தரமானது என கருதப்படுவதன் காரணமாக பெரும்பாலான நபர்கள் அந்த தங்கத்தை தான் வாங்குவர். அதற்கும் அடுத்தபடியாக தான் 18 காரட் தங்கம் உள்ளது. இந்த தங்கத்தில் தங்கத்தின் அளவு சற்று குறைவாக இருக்கும். அதாவது வெறும் 75 சதவீதம் மட்டுமே தங்க இருக்கும். அதன் காரணமாக, அதன் விலையும் குறைவாகவே இருக்கும்.
இதையும் படிங்க : இனி தட்கட் டிக்கெட் முன்பதிவுக்கு டோக்கன்.. ஆகஸ்ட் 1 முதல் வரும் புதிய நடைமுறை.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
18 காரட் தங்கத்திற்கும் நகைக் கடன் கிடைக்கும்?
பெரும்பாலான வங்கிகள் மற்றும் நகை அடகு கடைகளில் 18 காரட் தங்கத்திற்கு தங்க நகைக் கடன் வழங்கப்படுகிறது. 18 முதல் 24 காரட் வரையிலான தங்கத்திற்கு தங்க நகைக் கடன் வழங்கப்படுகிறது. இதில் என்ன ஒரு சிக்கல் என்றால் தங்கத்தின் தரம் குறைய குறைய அதற்கான கடன் தொகையும் குறையும். இந்த நிலையில், 22 மற்றும் 24 காரட் தங்க நகைகளை விடவும், 18 காரட் தங்கத்திற்கு தங்க நகைக் கடன் மிக குறைவாகவே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.