AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தபால் சேவைகளுக்கான கட்டணங்களை மாற்றிய தபால் துறை.. ஆவணங்களுக்கு குறைந்த விலை!

India Post New Charges From August 01, 2026 | இந்தியா போஸ்ட் சேவையை ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இந்தியா போஸ்ட் தனது சேவை கட்டணங்களை மாற்றியுள்ளது. இந்த மாற்றங்கள் ஆகஸ்ட் 01, 2026 முதல் அமலுக்கு வர உள்ளன.

தபால் சேவைகளுக்கான கட்டணங்களை மாற்றிய தபால் துறை.. ஆவணங்களுக்கு குறைந்த விலை!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 29 Jul 2026 15:37 PM IST

இந்தியாவில் உள்ள கடைக்கோடி கிராமங்களுக்கும் தபால் சேவையை வழங்கும் பணியை இந்திய தபால் துறை (India Post) மேற்கொண்டு வருகிறது. தபால் துறை மூலம் கடிதங்கள் அனுப்பும் பழக்கம் மக்கள் மத்தியில் குறைந்துவிட்டாலும், பார்சல் மற்றும் ஸ்பீட் போஸ்ட் உள்ளிட்ட சேவைகளுக்கு பெரும்பாலான பொதுமக்கள் தபால் துறையையே நாடுகின்றனர். இதுதவிர  அரசு ஆவணங்களான ஆதார் கார்டு, பான் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்டவையும் இந்த தபால் மூலமே அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதன் காரணமாக இந்தியர்களின் வாழ்வில் மிக முக்கியமான அங்கமாக இந்திய தபால் துறை மாறியுள்ளது.

இந்த நிலையில் தான், இந்திய தபால் துறை தனது தபால் சேவைகளின் கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த கட்டண மாற்றம் ஆகஸ்ட் 01, 2026 முதல் அமலுக்கு வர உள்ளது. இந்த நிலையில், இந்திய தபால் துறை கட்டண முறையில் மேற்கொண்டுள்ள மாற்றங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

தபால் சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்திய தபால் துறை

இந்திய தபால் துறை முதல் முறையாக ஆவணம் மற்றும் பார்சல் ஆகியவற்றுக்கு தெளிவான வரையறைகளையும், தனி தனி கட்டணங்களையும் வெளியிட்டுள்ளது. முன்னதாக  ஆவணங்கள், பார்சல்கள் என அனைத்திற்கும் ஒரே கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் அனைத்திற்கும் ஒரே கட்டணம் செலுத்தி வந்த நிலையில், அதில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : அரிசி விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் இமாலய உயர்வு.. ஏழை, நடுத்தர மக்கள் கடும் அவதி.. காரணம் என்ன?

ஆவணங்களை குறைந்த கட்டணத்தில் அனுப்பலாம்

இந்த புதிய விதிகளின் படி, மறு விற்பனை செய்ய முடியாத அதாவது ஆவணங்கள் உள்ளிட்டவற்றை மிக குறைந்த விலைக்கு அனுப்ப முடியும். இந்த நிலையில், வணிக பொருட்கள் மற்றும் மறு விற்பனை செய்யப்படக்கூடிய பொருட்கள் அனைத்தும் பார்சல் பிரிவில் இணைக்கப்பட்டுள்ளன. எனவே அவற்றுக்கு ஆவணங்களை விட சற்று அதிக கட்டணம் வசூல் செய்யப்படும்.

இதையும் படிங்க : சுமார் 1 கோடி குடும்பங்களுக்கு சொந்த வீடு.. மத்திய அரசின் இந்த அசத்தல் திட்டம் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்!

எவ்வளவு கட்டணம் வசூல் செய்யப்படும்?

24 மணி நேர விரைவு தபால் சேவையில், பொருளின் எடை மற்றும் தூரத்தை பொருத்து ரூ.38 முதல் ரூ.186 வரை கட்டணம் வசூல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவே 48 மணி நேர விரைவு தபால் சேவைக்கான கட்டணம் என்றால் ரூ.61 முதல் ரூ.121 வரை கட்டணம் வசூல் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us