முதலீடு செய்து 2 மடங்கு லாபம் பெறலாம்.. இந்த அஞ்சலக திட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா?
Kisan Vikas Patra Scheme Investment | அஞ்சலகங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், முதலீடு செய்த தொகைக்கு இரண்டு மடங்கு லாபத்தை தரும் திட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
நிதி பாதுகாப்பை உருவாக்க வேண்டும், பணத்தை பல மடங்கு உயர்த்த வேண்டும் என்றால் முதலீடு தான் ஒரே வழி. சம்பாதிக்கும் பணத்தை முறையாக முதலீடு செய்வது நல்ல லாபத்தை வழங்கும். இவ்வாறு பணத்தை முதலீடு செய்து நல்ல லாபத்தை பெற அஞ்சலகங்கள் மூலம் அரசு சில சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய அஞ்சலக திட்டம் ஒன்றில் முதலீடு செய்து இரண்டு மடங்கு லாபத்தை பெறுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அஞ்சலங்கள் மூலம் செயல்படுத்தப்படும் கேவிபி திட்டம்
அஞ்சலகங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு மற்றும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் கேவிபி (KVP – Kisan Vikas Patra) எனப்படும் கிசன் விகாஸ் பத்ரா திட்டம். இந்த திட்டத்தில் முதலீடு செய்து இரண்டு மடங்காக லாபத்தை பெற முடியும். அந்த வகையில், இந்த திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்து ரூ.2 லட்சம் பெறுவது எப்படி என பார்க்கலாம்.
இதையும் படிங்க : EPFO : ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.1.44 லட்சம் கோடி.. உங்களுக்கு வட்டி வந்துவிட்டதா?




115 மாதங்களில் இரண்டு மடங்கு லாபம்
இந்த கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் 115 மாதங்கள் முதலீடு செய்தால் இரண்டு மடங்கு லாபத்தை பெறலாம். அதாவது, 9 ஆண்டுகள் மற்றும் 7 மாதங்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படும் நிலையில், கூட்டு வட்டி அடிப்படையில் இந்த திட்டத்தில் சிறப்பு பலன்களை பெற முடியும்.
இதையும் படிங்க : “பார்ட்டி ஃபண்ட் தெரியாதது போல் நடிப்பு”.. முன்னாள் அமைச்சர் சேகர் பாபுவை மறைமுகமாக தாக்கிய மரிய வில்சன்!
இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.1,000 முதலே முதலீடு செய்ய முடியும். 115 கால அளவீடு கொண்ட இந்த திட்டத்தில் நீங்கள் ரூ.1 லட்சம் முதலீடு செய்தீர்கள் என்றால் திட்டத்தின் முடிவில் உங்களுக்கு ரூ.2 லட்சம் கிடைக்கும். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 9 ஆண்டுகளாக உள்ள நிலையில், 2 ஆண்டுகள் 6 மாதங்களுக்கு பிறகு கணக்கை முடித்தால் திட்டத்தின் விதிகளின்படி அசல் மற்றும் வட்டி வழங்கப்படும்.
ஒருவேளை நீங்கள் அதற்கு முன்னதாகவே கணக்கை முடித்தால் அஞ்சலக சேமிப்பு கணக்கிற்கான வட்டி விகிதமே கணக்கிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.