AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வீட்டிலிருந்தபடியே மாதம் ரூ.20,000 சம்பாதிக்கலாம் – பாதுகாப்பான வருமானம் தரும் அஞ்சலக திட்டம்

மத்திய அரசின் உத்தரவாதத்துடன் கூடிய வருமானத்தை விரும்புவோருக்கு அஞ்சல் அலுவலகம் ஒரு சிறந்த திட்டத்தை வழங்குகிறது. இந்திய அஞ்சல் துறை மாதாந்திர வருமானத் திட்டம் என்ற திட்டத்தின் மூலம் மாதம் ரூ. 20,000 வரை எவ்வாறு வருமானம் பெறலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

வீட்டிலிருந்தபடியே மாதம் ரூ.20,000 சம்பாதிக்கலாம் – பாதுகாப்பான வருமானம் தரும் அஞ்சலக திட்டம்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 26 Jul 2026 21:32 PM IST

எந்த வித அபாயம் இல்லாமல் முதலீடு செய்ய மத்திய அரசின் ‘அஞ்சலக மாதாந்திர வருமானத் திட்டம்‘ உங்களுக்குச் சிறந்த தேர்வாகும். இத்திட்டத்தில் ஒருமுறை முதலீடு செய்வதன் மூலம், 5 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் உங்கள் கணக்கில் நிலையான வட்டித் தொகை நேரடியாகச் சேரும். இதில் எந்தவித அபாயமும் இல்லை. அரசின் சமீபத்திய திருத்தப்பட்ட விதிகளின்படி, ஒரு தம்பதியினர் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச தொகையை கூட்டுக் கணக்கில் முதலீடு செய்வதன் மூலம், மாதம் ரூ. 19,000க்கும் அதிகமான வருமானத்தை ஈட்ட முடியும்.

அஞ்சலக மாதாந்திர வருமான திட்டம்

அஞ்சலக மாதாந்திர வருமானத் திட்டம் என்பது ஒருமுறை முதலீடு செய்யும் வகையிலான திட்டமாகும். இதில் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒரே தவணையில் முதலீடு செய்ய வேண்டும். அதிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகை ஒவ்வொரு மாதமும் முதலீட்டாளரின் கணக்கில் வரவு வைக்கப்படும். தற்போது, ​​இத்திட்டத்திற்கு அரசு ஆண்டுக்கு 7.4 சதவிகித வட்டி விகிதத்தை வழங்குகிறது. இத்திட்டத்தின் கால அளவு 5 ஆண்டுகள் ஆகும். இந்த திட்டத்தில் கணவன் – மனைவி அல்லது 2,3 நபர்கள் இணைந்து கூட்டுக் கணக்கைத் தொடங்கலாம். இதில் அதிகபட்ச முதலீட்டு வரம்பு ரூ.15 லட்சம் ஆகும்.

இதையும் படிக்க : இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ளன..வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால் என்ன ஆகும்?

மாதம் ரூ.20,000 வரை வருமானம் ஈட்டுவது எப்படி?

கணவன் மற்றும் மனைவி இணைந்து கூட்டுக் கணக்கில் அதிகபட்ச வரம்பான ரூ.15 லட்சத்தை முதலீடு செய்தால், 7.4 சதிவிகித வட்டி வழங்கப்படும் அடிப்படையில் ஆண்டுக்கு ரூ.1,11,000 வட்டி வருமானமாகக் கிடைக்கும். 12 மாதங்களுக்குப் பிரித்து வழங்கும்போது, ​​இது மாதத்துக்கு கணக்கிட்டால் ரூ.9,250 வரவு வைக்கப்படும்.

கணவன் மற்றும் மனைவி இருவரும் தனித்தனியாக தனிநபர் கணக்குகளை தொடங்கினால் இருவரும் அதிகபட்ச வரம்பான தலா ரூ.9 லட்சம் முதலீடு செய்தால், ஒரு கணக்கில் உள்ள ரூ.9 லட்சத்திற்கு மாதந்தோறும் ரூ.5,550 வட்டி கிடைக்கும். இவ்விரு கணக்குகள் மூலமாகவும் சேர்த்து மாதந்தோறும் ரூ.11,100 நிலையான வருமானம் கிடைக்கும். குடும்பத்தின் பிற உறுப்பினர்கள் பெயரிலும் இத்திட்டத்தின் கீழ் கணக்குகளைத் தொடங்கினால், மாதத்திற்கு ஏறக்குறைய ரூ.20,000 நிகர வருமானம் ஈட்ட முடியும்.

இதையும் படிக்க : 30 ஆண்டுகள் தொடர்ந்து பிஎஃப் செலுத்தினால், இறுதியில் எவ்வளவு பணம் கிடைக்கும்?

இத்திட்டத்தின் முக்கிய நன்மைகள்

  • அஞ்சலகத் திட்டங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருவதால், உங்கள் முதலீடு 100 சதவிகிதம் பாதுகாப்பாக இருக்கும்.
  • பங்குச் சந்தை அல்லது மியூச்சுவல் ஃபண்டுகள் போல இல்லாமல், இத்திட்டம் சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டது அல்ல.
  • மாதந்தோறும் கிடைக்கும் வட்டியை அஞ்சலகத்தின் தொடர் வைப்பு நிதிகணக்கில் மறுமுதலீடு செய்வதன் மூலம், கூட்டு வட்டி பலனைப் பெற்று அதிக வருவாயை ஈட்டலாம்.
  • அவசரத் தேவை ஏற்பட்டால், ஒரு வருடத்திற்குப் பிறகு ஒரு சிறிய அபராதத்தைச் செலுத்தி கணக்கை முடித்துக்கொள்ளலாம்.

எந்தவொரு இந்தியக் குடிமகனும் இக்கணக்கைத் தொடங்கலாம். 10 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய சிறார்களின் பெயரிலும் பெற்றோர்கள் கணக்குகளைத் தொடங்கலாம். உங்கள் அருகிலுள்ள அஞ்சலகத்திற்குச் சென்று, தேவையான KYC ஆவணங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் எளிதாக இந்த திட்டத்தில் கணக்கைத் தொடங்கலாம். மூத்த குடிமக்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் நிலையான மாத வருமானம் விரும்புவோருக்கு இந்த திட்டம் ஒரு சிறந்த தேர்வாகும்.

Follow Us