AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பழைய வங்கி கணக்கில் உங்களுக்கே தெரியாமல் பணம் இருக்கிறதா? எப்படி கண்டுபிடிப்பது?

பொதுவாக பணியாளர்களுக்கு நிறுவனங்களே தனியாக வங்கிகளில் சம்பள கணக்கு துவங்குகின்றன. இந்த நிலையில் பணியாளர்கள் வேறு வேலைக்கு மாறும்போது அந்த வங்கிக் கணக்கை நாம் மறந்துவிடுகிறோம். அப்படி நாம் மறந்துவிடும் பழைய கணக்குகளில் பணம் இருக்கிறதா என எப்படி கண்டுபிடிப்பது என பார்க்கலாம்.

பழைய வங்கி கணக்கில் உங்களுக்கே தெரியாமல் பணம் இருக்கிறதா? எப்படி கண்டுபிடிப்பது?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 24 Jul 2026 19:41 PM IST

பொதுவாக பணியாளர்களுக்கு நிறுவனங்களே தனியாக வங்கிகளில் சம்பள கணக்கு துவங்குகின்றன. இந்த நிலையில் பணியாளர்கள் வேறு வேலைக்கு மாறும்போது அந்த வங்கிக் கணக்கை நாம் மறந்துவிடுகிறோம். மேலும் வேறு நகரங்களுக்குமறும்போது, நம் குடும்பத்தில் யாராவது உயிரிழக்கும்போது அவர்களது வங்கி கணக்குகள் செயல்படாமல் போகும் நிலை ஏற்படும். வங்கி கணக்குகள் மட்டுமல்லாம், நிரந்தர வைப்பு கணக்குகள், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் போன்றவை காலப்போக்கில் மறந்து விடுகின்றன. ஆனால் நம் முதலீடு செய்யும் பணம் அப்படியே தான் இருக்கும். இந்த நிலையில் நம் பழைய கணக்குகளை எப்படி தெரிந்துகொள்வது எப்படி என பார்க்கலாம்.

பழைய வங்கி கணக்கில் உங்களுக்கே தெரியாமல் பணம் இருக்கிறதா?

இதனால் பணம் பறிமுதல் செய்யப்படாது. உரிமையாளர்கள் அல்லது சட்டப்பூர்வ வாரிசுகள் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து அந்தத் தொகையை மீண்டும் பெறலாம். ஆனால் அந்த பணம் நம்மால் உரிமை கோர முடியும். பழைய வங்கி கணக்குகளில் நமது பணம் உள்ளதா என்பதை இந்திய ரிசர்வ் வங்கியின் UDGAM என்ற தளத்தின் மூலம் அறிந்துகொள்ள முடியும். அதன் பிறகு சம்மந்தப்பட்ட வங்கியை அணுகி உரிய ஆவணங்களை சமர்பித்து நம் பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இதையும் படிக்க : EPFO : பிஎஃப் வட்டி வரவு வைத்த இபிஎஃப்ஓ.. உங்களுக்கு வந்துவிட்டதா?.. உடனே செக் பண்ணுங்க!

மியூச்சுவல் ஃபண்ட் கணக்குகளை தெரிந்துகொள்வது எப்படி?

நமது பழைய கணக்கு மட்டுமல்லாமல் நமது பெற்றோர், குடும்ப உறுப்பினர் யாரேனும் உயிரிழந்திருந்தால், அவர்களது பழைய வங்கி கணக்குகள் அல்லது எஃப்டி கணக்குகளில் உரிமை கோரப்படாத பணம் இருக்கலாம். இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகள் அல்லது அவர்கள் நாமினியாக நியமித்த நபர்கள் உரிய சான்றுகளை சமர்பித்து அந்த தொகையை பெற்றுக்கொள்ள முடியும்.

இதையும் படிக்க : AI : மனிதர்களின் வாழ்வை எளிதாக்கும் ஏஐ.. எந்த எந்த வகையில்?

மேலும் பல ஆண்டுகளுக்கு முன் நம் பெற்றோர்கள் வாங்கிய மியூச்சுவல் ஃபண்ட்கள் முகவரி மற்றும் மொபைல் எண் மாற்றம் காரணமாக நம்மால் தெரிந்துகொள்ள முடியாமல் போகலாம். இதுபோன்ற முதலீடுகளை கண்டறிய செபி அறிமுகப்படுத்திய MITR என்ற இணையதளத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம். ஒரு மியூச்சுவல் ஃபண்ட் போர்டலில் 10 ஆண்டுகளாக முதலீட்டாளர்கள் எந்த பரிவர்த்தனையும் செய்யப்படாமல் இருந்தால் அது செயலற்ற கருதாக கருதப்படும். அந்த மூதலட்டைப் பெற சம்மந்தப்பட்ட நிறுவனம் அல்லது. ஆர்டிஏவை தொடர்பு கொண்டு விவரங்களை சமர்பிக்க வேண்டும். நம் அடையாளங்கள், வங்கி கணக்கு விவரங்கள் சரிபார்த்த பிறகு உங்கள் தொகை வழங்கப்படும்.

பல ஆண்டுகளுக்கு முன்பு நேரடியாக நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தால், பழைய பங்கு சான்றிதழ்கள் பெறப்படாத டிவிடெண்ட் தொகைகள் போன்றவையும் உங்களுக்குச் சொந்தமாக இருக்கலாம். அவற்றையும் தெரிந்துகொள்வது அவசியம்.

Follow Us