பிஎஃப் கணக்கில் பணம் எடுக்க போறீங்களா?.. இந்த 25% குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்!
What Is 25 Percentage Rules In EPFO | பிஎஃப் கணக்கு வைத்துள்ளவர்கள் அனைவரும் தங்களுக்கு பண தேவை ஏற்படும்போது மொத்த எடுத்துக்கொள்ளலாம் என நினைப்பர். ஆனால், பணம் எடுக்க விண்ணப்பிப்பதற்கு முன்னதாக இந்த 25 சதவீத விதி குறித்து தெரிந்துக்கொள்வது அவசியமாக உள்ளது.
இந்தியாவில் உள்ள தனியார் துறை ஊழியர்களுக்கான மிக முக்கிய அம்சமாக இந்த ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் (EPFO – Employee Provident Fund Organization) உள்ளது. காரணம், இந்த அமைச்சகம் ஊழியர்களின் மாத ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்து, ஊழியர்களின் பெயர்களில் தொடங்கப்படும் கணக்கில் வரவு வைக்கும். இந்த கணக்கில் உள்ள பணத்தை ஊழியர்கள் தங்களது தேவைகளுக்காக எடுத்துக்கொள்ள அனுமதியும் உள்ளது.
இவ்வாறு பிஎஃப் பணத்தை எடுக்க அனுமதி வழங்கப்படும் நிலையில், பலரும் கணக்கில் இருக்கும் முழு தொகையையும் எடுத்துக்கொள்ளலாம் என நினைக்கின்றனர். இந்த நிலையில் தான் 25 சதவீத விதி குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது. அது என்ன 25 சதவீத விதி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இபிஎஃப்ஓவில் வந்த 25% விதி – அப்படி என்றால் என்ன?
பிஎஃப் கணக்கை டிஜிட்டல் மயமாக்கும் வகையில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் 2026 சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் பல்வேறு மாற்றங்கள் மற்றும் புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வகையில் பிஎஃப் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு வைப்பது தொடர்பான முக்கிய அம்சத்தை அறிமுகம் செய்தது. அதாவது, பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை எடுக்கும்போது 25 சதவீதம் குறைந்தபட்ச இருப்பை விட்டுவிட வேண்டும் என்ற விதியை அறிமுகம் செய்தது.




இதையும் படிங்க : தமிழ்நாடு பட்ஜெட் 2026: மக்களின் எதிர்பார்ப்புகளும் முக்கிய அறிவிப்புகளும்!
இரண்டு புதிய வரையறைகளை வெளியிட்ட இபிஎஃப்ஓ
முதலில் குறைந்தபட்ச இருப்பு, அதாவது பணத்தை எடுக்க விண்ணப்பிக்கும் தேதி வரை பிஎஃப் கணக்கில் உள்ள பணம் மற்றும் அதற்கு சேர்ந்துள்ள வட்டி தொகை ஆகியவற்றை சேர்த்து அந்த மொத்த இருப்பில் 25 சதவீத தொகை குறைந்தபட்ச இருப்பு என வரையறுக்கப்படுகிறது. மற்றொன்று, மொத்த கணக்கு இருப்பில் இருந்து மேலே குறிப்பிடப்பட்டுள்ள 25 சதவீத குறைந்தபட்ச இருப்பை கழித்த பிறகு மீதமுள்ள 75 சதவீத தொகையே பயனர்கள் பிஎஃப் கணக்கில் இருந்து எடுத்துக்கொள்ள தகுதியான தொகை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : த.வெ.க அரசின் முதல் பட்ஜெட்.. பொது மற்றும் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறும் முக்கிய அறிவிப்புகள் என்ன?
அதாவது ஒருவரின் பிஎஃப் கணக்கில் ரூ.2 லட்சம் பணம் உள்ளது என வைத்துக்கொள்வோம். அதில் 25 சதவீதம் என்றால் ரூ.50,000 ஆகும். இந்த நிலையில், இந்த ரூ.50,000 உங்களால் எடுக்க முடியாது. மீதமுள்ள ரூ.1.5 லட்சத்தை மட்டும் தான் எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.