கிரெடிட் கார்டில் வசூலிக்கப்படும் மறைமுக கட்டணங்கள்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
Hidden Charges In Credit Card | தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான நபர்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்துகின்றனர். ஆனால், அவர்களுக்கு எவ்வாறு முறையாக கிரெடிட் கார்டு பயன்படுத்துவது என தெரியவில்லை. இந்த நிலையில், கிரெடிட் கார்டு குறித்த சில முக்கிய அம்சங்கள் குறித்து தெரிந்துக்கொள்வோம்.
தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான மக்களால் பரவலாக பயன்படுத்தப்படும் முக்கிய அம்சமாக கிரெடிட் கார்டு (Credit Card) உள்ளது. குறைந்த மாத சம்பளம் அல்லது மாத சம்பள பற்றாக்குறை உள்ளவர்கள், இந்த கிரெடிட் கார்டு மூலம் தான் தங்களது மாத நிதி தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்கின்றனர். கிரெடிட் கார்டை முறையாக பயன்படுத்தினால், அதில் இருந்து பல அசத்தல் அம்சங்களை பெறலாம். அதனை முறையான பயன்படுத்த தெரியாதவர்கள் கிரெடிட் கார்டு கடனில் சிக்கிக்கொள்கின்றனர். இந்த நிலையில், கிரெடிட் கார்டை முறையாக பயன்படுத்த அதில் உள்ள மறைமுக கட்டணங்களை தெரிந்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கிரெடிட் கார்டில் வசூலிக்கப்படும் மறைமுக கட்டணங்கள்
கிரெடிட் கார்டில் சில விஷயங்களுக்கு மறைமுக கட்டணங்கள் விதிக்கப்படும். அதனை தெரிந்துக்கொள்ளும் பட்சத்தில், தேவையற்ற கடன் வலையில் சிக்காமல் இருக்க முடியும்.
மினிமம் டியூ
நீங்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்திய பிறகு, பயன்படுத்திய தொகைக்கான மினிமம் டியூவை மட்டுமே செலுத்தி வரும் பட்சத்தில் உங்கள் கணக்கு டிஃபால்ட் ஆகாமல் பாதுகாக்கப்படுமே தவிர, மீதமுள்ள தொகைக்கான வட்டி உங்களுக்கு சேர்ந்துக்கொண்டே தான் இருக்கும். அவ்வாறு ஒரு ஆண்டுக்கு உங்களுக்கு 45 சதவீதம் வரை வட்டி விதிக்கப்படலாம். எனவே மினிமம் டியூவுக்கு பதிலாக முழு தொகையையும் செலுத்த முயற்சி செய்யுங்கள்.




இதையும் படிங்க : கடைகளில் நீங்கள் சரியான விலைக்கு தான் தங்கம் வாங்குகிறீர்களா?.. எப்படி தெரிந்துக்கொள்வது?
பணம் எடுப்பதை தவிருங்கள்
பலரும் கிரெடிட் கார்டில் இருக்கும் பணத்தை ஏடிஎம்-ல் (ATM – Automated Teller Machine) இருந்து எடுத்து செலவு செய்கின்றனர். இதற்கு கேஷ் அட்வான்ஸ் (Cash Advance) என்ற கட்டணம் வசூல் செய்யப்படும். எனவே, நீங்கள் கிரெடிட் கார்டு பணத்தை ஏடிஎம் மூலம் எடுக்கும்போது அதிக வட்டி செலுத்த வேண்டிய நிலை உருவாகும். எனவே, மிக அவசர தேவைகள் மட்டுமன்றி, கிரெடிட் கார்டில் இருக்கும் பணத்தை ஏடிஎம் மூலம் எடுக்காதீர்கள்.
இதையும் படிங்க : தமிழ்நாடு பட்ஜெட் 2026: மக்களின் எதிர்பார்ப்புகளும் முக்கிய அறிவிப்புகளும்!
லேட் பேமெண்ட்
பெரும்பாலான பயனர்கள் செய்யக்கூடிய மிகப்பெரிய தவறு தான் இந்த லேட் பேமெண்ட் (Late Payment). ஒவ்வொரு முறையும் நீங்கள் தாமதமாக செலுத்தும் டியூவுக்கு வட்டி விதிக்கப்படுவதோடு, மீதமுள்ள தொகைக்கும் வட்டி விதிக்கப்படும். இது உங்கள் கிரெடிட் ஸ்கோரில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறையும் பட்சத்தில், உங்களால் எதிர்காலத்தில் எந்த கடனை வாங்க முடியாத சூழல் உருவாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.