AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கடைகளில் நீங்கள் சரியான விலைக்கு தான் தங்கம் வாங்குகிறீர்களா?.. எப்படி தெரிந்துக்கொள்வது?

Are You Buying Gold Jewellery In Shops For Fair Price | தங்கம் விலைக்கும், நகைக் கடைக்கு சென்று தங்க நகைகளை வாங்குவதற்கு நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அதாவது, நகைக் கடைக்கு சென்று தங்கத்தை வாங்கும்போது கூடுதலாக பணம் செலுத்த வேண்டும்.

கடைகளில் நீங்கள் சரியான விலைக்கு தான் தங்கம் வாங்குகிறீர்களா?.. எப்படி தெரிந்துக்கொள்வது?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 23 Jul 2026 17:48 PM IST

இந்தியர்கள் மத்தியில் காலம் காலமாக நீடித்து வரும் பழக்கம் தான் தங்கத்தில் முதலீடு (Gold Investment) செய்வது. கையில் கொஞ்சம் பணம் இருந்தாலும் உடனே தங்கத்தில் முதலீடு செய்வதை இந்தியர்கள் வழக்கமாக வைத்துள்ளனர். சுப நிகழ்ச்சிகளில் தங்கம் பயன்படுத்துவது, அணிகலன்களாக தங்கத்தை அணிந்துக்கொள்வது என தங்கத்தையும், இந்தியர்களையும் பிரிக்க முடியாத அளவு பந்தம் உள்ளது.

ஒருபக்கம் தங்கம் விலை உயர்ந்துக்கொண்டே சென்றாலும், மறுபக்கம் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்துக்கொண்டே உள்ளது. இதன் மூலம் தங்கம் எவ்வளவு விலை உயர்வை சந்தித்தாலும் அதில் முதலீடு செய்யும் ஆர்வம் மட்டும் இந்தியர்களுக்கு குறையாது என்பது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், கடைக்கு சென்று தங்கத்தை சரியான விலைக்கு தான் வாங்குகிறோமா என்பது குறித்து தெரிந்துக்கொள்வோம்.

சரியான விலைக்கு தங்கம் வாங்குகிறோமா?

இன்று (ஜூலை 23, 2026) ஒரு கிராம் தங்கம் ரூ.13,500-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.1,08,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், இதே விலைக்கு கடைகளுக்கு சென்று தங்கம் வாங்க முடியாது. காரணம், தங்கத்திற்கு செய்கூலி மற்றும் சேதாரம் செலுத்த வேண்டும். இந்த நிலையில், நகைக் கடைகளுக்கு சென்று செய்கூலி மற்றும் சேதாரம் செலுத்தி சரியான விலைக்கு தான் தங்கம் வாங்குகிறோமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : தடையற்ற மருத்துவ சிகிச்சைக்கு ஆபா ஐடி ஏன் அவசியம்?.. ஆபா ஐடி என்றால் என்ன?

தங்கம் விலை எப்படி கணக்கிடப்படுகிறது?

சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.13,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஒரு கிராம் தங்கத்தின் விலையோடு 6 சதவீதம் கலால் வரியை சேர்த்தால் கூடுதலாக ரூ.819 வரும். அதன்படி, ரூ.14,319 ஆகும். அதுமட்டுமன்றி, 3 சதவீதம் ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்படும். ஜிஎஸ்டி வரி மட்டுமே ரூ.405 வரும். இது தவிர ஒவ்வொரு கடையும் ஒவ்வொரு விதமான செய்கூலி மற்றும் சேதாரத்தை கொண்டு இருக்கும். அதற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படும்.

இதையும் படிங்க : Credit Card : கிரெடிட் கார்டு கேன்சல் செய்வதால் ஏற்படும் சிக்கல்கள்.. இதையெல்லாம் கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

எனவே நீங்கள் கடைக்கு சென்று தங்கம் வாங்கும்போது இவை அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை சோதனை செய்து, உறுதி செய்ய வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us