அஞ்சலக தொடர் வைப்பு திட்டம் – மாதம் ரூ.2000 முதலீடு… 5 ஆண்டுகளில் எவ்வளவு கிடைக்கும்?
அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் ஒன்றான ஆர்டி எனப்படும் தொடர் வைப்புத் திட்டம் மூலம் மாதம் சிறிய அளவில் முதலீடு செய்வதன் மூலம் பெரிய தொகையை சேமிக்க முடியும். மாதம் ரூ.2000 முதலீடு செய்தால் 5 ஆண்டுகளில் எவ்வளவு கிடைக்கும் என பார்க்கலாம்.
அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் ஒன்றான ஆர்டி எனப்படும் தொடர் வைப்புத் திட்டம் மூலம் மாதம் சிறிய அளவில் முதலீடு செய்வதன் மூலம் பெரிய தொகையை சேமிக்க முடியும். இது மத்திய அரசின் கீழ் செயல்படுவதால், உங்கள் பணம் இங்கு பாதுகாப்பாக இருக்கும். முதலீட்டிற்கு உத்தரவாதமான வருமானத்தை வழங்கும் மிகச் சில திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். குறிப்பாக மாத சம்பளம் பெறுவோர், முதியவர்கள் என அனைத்துத் தரப்பினரும் இத்திட்டத்தைத் தேர்ந்தெடுக்கலாம். இத்திட்டத்தின் மிக முக்கிய அம்சம் என்னவென்றால், இது குறைந்த ஆபத்துள்ள முதலீட்டு திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
அஞ்சலகத் தொடர் வைப்புத் திட்டம்
அஞ்சலகத் தொடர் வைப்புத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை நீங்கள் முதலீடு செய்வதன் மூலம் குறிப்பிட்ட காலத்தில் பெரிய தொகையை பெற முடியும். இந்த திட்டத்தியன் முதலீட்டுக் காலம் ஆண்டுகள் ஆகும். இருப்பினும், இந்தக் காலத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கும், பின்னர் மீண்டும் 5 ஆண்டுகளுக்கும் நீட்டிக்க முடியும்.
இதையும் படிக்க : பழைய வங்கி கணக்கில் உங்களுக்கே தெரியாமல் பணம் இருக்கிறதா? எப்படி கண்டுபிடிப்பது?




இந்த திட்டத்தில் நாம் முதலீடு செய்யும் தொகைக்கு 6.7 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்த வட்டி காலாண்டு அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. மாதம் ரூ. 2,000 வைப்புச் செய்ய நீங்கள் தயாராக இருந்தால், இறுதியில் எவ்வளவு தொகை நமக்கு கிடைக்கும் என பார்க்கலாம்.
அதன்படி 5 ஆண்டுகளுக்கு நாம் மாதம் ரூ.2000 முதலீடு செய்தால், மொத்தமாக 5 ஆண்டுகளில் ரூ.1,20,000 ஆக உயரும். இதற்கு வட்டி ஆண்டுக்கு 6.7 சதவிகிதம் என கணக்கிட்டால் 5 ஆண்டுகளில் ரூ.22, 732 கிடைக்கும். இதனையடுத்து முதலீட்டு காலம் முடிவடையும் போது நம் கையில் ரூ.1,42,732 ஆக இருக்கும். இருப்பினும் முதலீட்டு காலத்தை நீடிக்கும் போது நமக்கு கிடைக்கும் லாபமும் அதிகரிக்கும்.
இது அரசின் உத்தரவாதம் கொண்ட முதலீட்டுத் திட்டம் மற்றும் உறுதியான வருமானம் கிடைக்கும் திட்டம் என்பதால் பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களை எதிர்பார்ப்பவர்களுக்கு இது சரியாக இருக்கும். மேலும் இந்த திட்டத்தில் காலாண்டு அடிப்படையில் வட்டி வழங்கப்படுகிறது. மேலும் சந்தையின் ஏற்ற இறக்கங்கள் இந்த திட்டத்தை பாதிப்பதில்லை.
இதையும் படிக்க : தமிழ்நாடு எதிர்காலம் என்ன: பட்ஜெட் 2026-ன் மாஸ் பிளான்!
இந்த திட்டத்திற்கு 18 வயது பூர்த்தியடைந்த இந்திய குடிமக்கள் அனைவரும் இந்த தொடர் வைப்பு திட்டத்தில் கணக்கு தொடங்கலாம். கணக்கு துவங்க நம்மிடம் ஆதார் கார்டு, பான் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவை தேவைப்படும். இந்த திட்டத்தில் ரூ.100ல் இருந்து துவங்கலாம் என்பது தான் இந்த திட்டத்தின் தனிச்சிறப்பு. அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். கணக்கு தொடங்கி 3 ஆண்டுகளுக்கு பிறகே நம் கணக்கை மூட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.