EPFO : ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.1.44 லட்சம் கோடி.. உங்களுக்கு வட்டி வந்துவிட்டதா?
PF Interest Credited To Employees PF Accounts | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் பிஎஃப் வட்டியை வரவு வைத்துள்ளது. இந்த நிலையில், பிஎஃப் வட்டி வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை இணையதளம் மூலம் தெரிந்துக்கொள்வது எப்படி என பார்க்கலாம்.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் (EPFO – Employee Provident Fund Organization), ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் (PF – Provident Fund) இருக்கும் பிஎஃப் பணத்திற்கு ஆண்டுதோறும் வட்டி வரவு வைத்து வருகிறது. இந்த 2026 ஆம் ஆண்டுக்கான வட்டி எப்போது வரவு வைக்கப்படும் என பயனர்கள் மிக ஆவலாக எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்தனர். அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் வட்டி வரவு வைத்தது. இந்த நிலையில், ஊழியர்கள் தங்களுக்கு பிஎஃப் வட்டி வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை தெரிந்துக்கொள்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஊழியர்களின் பிஎஃப் கணக்குகளுக்கு 1.44 லட்சம் கோடி வட்டி
2025 ஆம் ஆண்டை போலவே 2026 ஆம் ஆண்டுக்கும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் வரி விகிதத்தை 8.25 சதவீதமாகவே வைத்திருப்பதாக அறிவித்தது. இந்த நிலையில், 2025 – 2026 நிதியாண்டில் ரூ.34 கோடி சந்தாதாரர்களுக்கு ரூ.1.44 லட்சம் கோடியை வட்டியாக வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதன் காரணமாக இந்த நிதியாண்டுக்கான வட்டி எப்போது வரவு வைக்கப்படும் என ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வட்டி வரவு வைக்கப்பட்டது.
இதையும் படிங்க : தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் வெடிக்கப்போகும் வெடிகுண்டு.. தயாராகும் ஊழல் பட்டியல்.. நிதித்துறை அமைச்சர் அதிரடி!
பிஎஃப் வட்டி வரவு வைக்கப்பட்டதா? – தெரிந்துக்கொள்வது எப்படி?
பிஎஃப் வட்டி வரவு வைக்கப்பட்டது குறித்து பயனர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அப்படி குறுஞ்செய்தி வரவில்லை என்றால் ஊழியர்கள் ஊழியர் வருங்கால வைப்பு நிதி இணையதளம் மூலம் மிக சுலபமாக தெரிந்துக்கொள்ளலாம்.
- முதலில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்திற்கு செல்ல வேண்டும்.
- அங்கு பயனர்கள் தங்களது யுஏஎன் எண், கேப்ட்சா ஆகியவற்றை உள்ளிட்டு லாக் இன் செய்ய வேண்டும்.
- லாக் இன் செய்து உள்ளே சென்ற பிறகு e Passbook என ஒரு ஆப்ஷன் தோன்றும்.
- அதனை தேர்வு செய்ய வேண்டும்.
- அதில் பிஎஃப் கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது, எவ்வளவு வட்டி வரவு வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து சுலபமாக தெரிந்துக்கொள்ளலாம்.
இதையும் படிங்க : மொத்த குடும்பத்துக்கும் ஒரே ஹெல்த் இன்சூரன்ஸ் எடுப்பது நல்லதா? பின்விளைவுகள் என்ன?
மேலே குறிப்பிடப்பட்டுள்ள முறையை பின்பற்றி பிஎஃப் கணக்கில் உள்ள இருப்பு மற்றும் வட்டி தொகையை சுலபமாக தெரிந்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.