AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Gold : கையில் ரூ.1 லட்சம் இருந்தால் எவ்வளவு தங்கம் வாங்கலாம்?.. இந்த கணக்கை தெரிந்துக்கொள்ளுங்கள்!

Gold For 1 Lakh Rupees | தங்கம் விலை நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், இன்றைய (ஜூலை 29, 2026) தங்கம் விலை நிலவரப்படி ரூ.1 லட்சத்திற்கு எவ்வளவு தங்கம் வாங்கலாம்.

Gold : கையில் ரூ.1 லட்சம் இருந்தால் எவ்வளவு தங்கம் வாங்கலாம்?.. இந்த கணக்கை தெரிந்துக்கொள்ளுங்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 29 Jul 2026 17:12 PM IST

புவிசார் பதற்றங்கள் உள்ளிட்டவற்றின் காரணமாக தங்கம் விலை (Gold Price),  நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஒருநாள் விலை உயர்வை சந்திக்கும் தங்கம், மறுநாள் சரிவை சந்திக்கிறது. இவ்வாறு கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை நிலையற்ற தன்மையை கொண்டுள்ளது. சென்னையில் நேற்று (ஜூலை 28, 2026) தங்கம் விலை சரிந்த நிலையில், இன்று (ஜூலை 28, 2026) தங்கம் விலை மீண்டும் சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், தற்போதைய நிலவரப்படி, ரூ.1 லட்சத்திற்கு எவ்வளவு தங்கம் வாங்க முடியும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஒரே நாளில் ரூ.480 சரிவை சந்தித்த தங்கம் விலை

சென்னையில் இன்று (ஜூலை 29, 2026) 22 காரட் தங்கம் ரூ.60 சரிவை சந்தித்துள்ளது. இதன் காரணமாக ஒரு கிராம் தங்கம் ரூ.13,155-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று (ஜூலை 28, 2026) தங்கம் விலை கிராமுக்கு ரூ.155 குறைந்து ஒரு கிராம் ரூ.13,215-க்கும், சவரனுக்கு ரூ.1,240 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,720-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதையும் படிங்க : அரிசி விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் இமாலய உயர்வு.. ஏழை, நடுத்தர மக்கள் கடும் அவதி.. காரணம் என்ன?

ரூ.1 லட்சத்திற்கு எவ்வளவு தங்கம் வாங்கலா?

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக ஒரு சவரன் தங்கம் ரூ.1,23,000-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், கடந்த சில மாதங்களாக தங்கம் விலை சரிவை சந்தித்துள்ள நிலையில், தற்போது ஒரு சவரன் தங்கம் ரூ.1,05,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது முன்பை விட குறைவான விலைக்கே ஒரு சவரன் தங்கத்தை வாங்கிக்கொள்ளலாம்.

இதையும் படிங்க : சுமார் 1 கோடி குடும்பங்களுக்கு சொந்த வீடு.. மத்திய அரசின் இந்த அசத்தல் திட்டம் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்!

தங்கத்தை ஆபரணமாக கடைகளில் வாங்கும்பொது செய்கூலி மற்றும் சேதாரம் செலுத்த வேண்டும். இதன் காரணமாக ரூ.1,05,000 தங்கத்தின் விலையாக உள்ளது என்றால் அதனுடன் கூடுதலாக பணம் செலவு செய்ய வேண்டும். அதாவது 12 சதவீதம் செய்கூலி, சேதாரம் மற்றும் 3 சதவீதம் ஜிஎஸ்டி ஆகியவை விதிக்கப்படும். இதன் காரணமாக கூடுதல் தொகையை செலுத்த வேண்டும். இந்த நிலையில், தற்போதைய நிலவரப்படி நீங்கள் கையில் ரூ.1 லட்சம் பணம் வைத்திருந்தால் உங்களால் 6.58 கிராம் தங்க நகை வாங்க முடியும்.

Follow Us