AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோவை ரூ.90,000-க்கு வாங்கிக்கொள்ளலாம்.. பிளிப்கார்டின் இந்த டீலை மிஸ் பண்ணிடாதீங்க!

Apple iPhone 17 Pro Gets Huge Discount | ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் மாதம் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த நிலையில், ரூ.1,34,000 மதிப்புள்ள ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோவை பிளிப்கார்ட் சலுகை மூலம் ரூ.90,000-க்கு வாங்கலாம்.

ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோவை ரூ.90,000-க்கு வாங்கிக்கொள்ளலாம்.. பிளிப்கார்டின் இந்த டீலை மிஸ் பண்ணிடாதீங்க!
ஆப்பிள் 17 ப்ரோ ஸ்மார்ட்போன்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 05 Aug 2026 21:36 PM IST

உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள் (Apple)
தனது அடுத்த மாடல் ஸ்மார்ட்போனை, செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்ய உள்ளது. அந்த ஸ்மார்ட்போன் இதற்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களை விட சில அட்வான்ஸ்டு அம்சங்களை கொண்டு இருக்கும் என கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் தற்போது விலை குறைவாக விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோ (Apple iPhone 17 Pro) பிளிப்கார்டில் (Flipkart) ரூ.90,000-க்கும் கீழ் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோவுக்கு பிளிப்கார்டில் வழங்கப்பட்டுள்ள சலுகை குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஐபோன் 17 ப்ரோ – ரூ.90,000-க்கு கீழ் கிடைக்கிறது?

256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோ பிளிப்கார்ட் தளத்தில் ரூ.1,32,900-க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அதாவது, அதன் அசல் விலையில் இருந்து ரூ.2,000 குறைவாக விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர நீங்கள் ரூ.3,000 வரை உடனடி தள்ளுபடி பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் அறிமுக விலையான ரூ.1,34,900-ல் இருந்து ரூ.1,29,900-க்கு வாங்கலாம். ஆக்சிஸ், இசிஐசிஐ மற்றும் எஸ்பிஐ உள்ளிட்ட கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி இந்த சலுகையை பெறலாம்.

இதையும் படிங்க : தீவிரமடையும் மழை- நீரில் வாகனம் ஓட்டும்போது செய்யக்கூடாத 5 தவறுகள்

எக்ஸ்சேஞ்சுக்கு ரூ.54,400 வழங்கப்படும்

அதுமட்டுமன்றி, பிளிப்கார்ட் நிறுவனம் எக்ஸ்சேஞ் சலுகை வழங்குகிறது. பயனர்கள் வழங்கும் மாடல் மற்றும் அந்த ஐபோனின் தரத்தை பொறுத்து ரூ.54,400 வரை வழங்குகிறது. உதாரணமாக, நீங்கள் ஆப்பிள் ஐபோன் 14 ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ் செய்தால் உங்களுக்கு ரூ.38,950 வரை வழங்கப்படும். இதன் உடன் ரூ.3,000 உடனடி சலுகை பெறும் பட்சத்தில் உங்களால் ரூ.90,950-க்கு ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோ ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.

இதையும் படிங்க : WhatsApp : வயதை கேட்கும் வாட்ஸ்அப்.. Age Restriction அம்சத்தை அறிமுகம் செய்ய திட்டம்?

பிளிப்கார்டின் இந்த சலுகையை பயன்படுத்தி ரூ.1,34,900 மதிப்பிலான ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோவை, வெறும் ரூ.90,000-க்கு வாங்கிக்கொள்ளலாம். நீண்ட நாட்களாக ஸ்மார்ட்போன் வாங்க காத்துக்கொண்டு இருக்கும் நபர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.

Follow Us