பயனர்களின் வாட்ஸ்அப் கணக்கை 24 மணி நேரம் மூடிய மெட்டா.. காரணம் என்ன?
Meta Blocked WhatsApp Accounts | மெட்டா நிறுவனம் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் பயனர்களின் வாட்ஸ்அப் கணக்கை முடக்கம் செய்துள்ளது. இதன் காரணமாக பயனர்கள் 24 மணி நேரம் தங்களது வாட்ஸ்அப்பில் எந்த பணிகளையும் மேற்கொள்ள முடியாமல் கடும் சிரமங்களை எதிர்க்கொண்டனர்.
உலக அளவில் மில்லியன் கணக்கான மக்கள் தங்களது அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் முக்கிய செயலியாக மெட்டாவின் (Meta) வாட்ஸ்அப் (WhatsApp) உள்ளது. சிறிது நேரம் வாட்ஸ்அப் செயலி முடங்கினாலே பலரும் கடும் சிரமங்களை சந்திப்பர். இந்த நிலையில், இந்தியாவில் உள்ள சில பயனர்களுக்கு 24 மணி நேரம் வாட்ஸ்அப் செயலி முடக்கம் செய்யப்பட்டுள்ளது. அதுவும் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், பயனர்களுக்கு 24 மணி நேரம் வாட்ஸ்அப் செயலி முடங்கியது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வாட்ஸ்அப் பயனர்களின் கணக்குகளை முடக்கிய மெட்டா – காரணம் என்ன?
இந்தியா மட்டுமன்றி, உலக அளவில் உள்ள ஏராளமான பயனர்களின் வாட்ஸ்அப் கணக்கை மெட்டா முடக்கம் செய்துள்ளது. எந்த வித முன் அறிவிப்பும் இல்லாமல் மேற்கொள்ளப்பட்ட இந்த 24 மணி நேர முடக்கத்தால் பயனர்கள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகினர். கணக்கை முடக்குவதற்கு முன்னதாக தகவல் தெரிவிக்காத மெட்டா, கணக்கு முடக்கம் செய்யப்பட்ட பிறகு 24 மணி நேர Review-க்கு பிறகே கணக்கை பயன்படுத்த முடியும் என்று பயனர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது.
இதையும் படிங்க : WhatsApp : வயதை கேட்கும் வாட்ஸ்அப்.. Age Restriction அம்சத்தை அறிமுகம் செய்ய திட்டம்?




அனைத்து அம்சங்களுக்கும் தற்காலிக தடை
நேற்று (ஆகஸ்ட் 03, 2026) இரவு 8 மணி அளவில் பயனர்கள் இந்த சிக்கலை எதிர்க்கொண்டுள்ளனர். வாட்ஸ்அப் செயலியை பயனர்கள் திறக்க முயற்சி செய்த நிலையில், அவர்களால் குறுஞ்செய்தி அனுப்புவது, பெறுவது உள்ளிட்ட எந்தவித சேவைகளையும் பெற முடியாமல் போயுள்ளது. அதாவது வாட்ஸ்அப் செயலியில் உள்ள அனைத்து சேவைகள் மற்றும் வசதிகள் தற்காலிகமாக முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமானது ஒன்பிளஸ் என்6எக்ஸ்.. அதுவும் பட்ஜெட் விலையில்.. முழு விவரம் இதோ!
மெட்டாவின் செயலுக்கு பயனர்கள் கடும் அதிர்ச்சி
எந்தவித முன் அறிவிப்பும் இன்றி மெட்டா மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு பயனர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மெட்டாவின் இந்த நடவடிக்கையில் தங்களது தினசரி வாழ்க்கை மற்றும் தொழில் உள்ளிட்டவை கடும் பாதிப்புக்கு உள்ளானதாக பலரும் சமூக ஊடகங்களில் தங்களது அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.