ஸ்மார்ட்போன்கள் முதல் கேட்ஜெட்ஸ் வரை.. அமேசான் கிரேட் ப்ரீடம் சேலில் கிடைக்கும் சலுகைகள் என்ன என்ன?
Amazon Great Freedom Sale 2026 | அமேசான் கிரேட் ப்ரீடம் சேல் நேற்று (ஆகஸ்ட் 07, 2026) முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சேலில் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் மற்றும் கேட்ஜெட்களுக்கு அசத்தல் தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அமேசான் (Amazon) நிறுவனம் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தனது கிரேட் ப்ரீடம் சேலை (Great Freedom Sale) அறிவித்தது. அதன்படி, நேற்று (ஆகஸ்ட் 07, 2026) முதல் அமேசானின் தி கிரேட் ப்ரீட்ம் சேல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சேலில் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் உள்ளிட்ட கேட்ஜெட்களுக்கு அசத்தல் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அமேசானின் இந்த கிரேட் ப்ரீடல் சேலில் உள்ள சில அட்டகாசமான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஜியோமி பேட் 8-க்கு அசத்தல் தள்ளுபடி
ஜியோமி பேட் 8-க்கு (Xiaomi 8 Pad) இந்த ப்ரீடம் சேலில் அசத்தல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது ரூ.43,999-க்கு அறிமுகமான நிலையில், தற்போது இந்த சேலில் வெறும் ரூ.39,749-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஸ்னாப்டிராகன் 8எஸ் 4ஜென் சிப்செட் மற்றும் 9,000 mAh பேட்டரி அம்சத்தை கொண்ட இந்த பேடை வாங்க இது சிறந்த சலுகையாக உள்ளது.
இதையும் படிங்க : EPFO : 2 ஆண்டுகள் கரியர் கேப் ஏற்பட்டால் பிஎஃப் கணக்கு என்னவாகும்?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!




ஜியோமி பவர் பேங்க் 5ஐ 20000 67வாட்ஸ்
ஸ்மார்ட்போன்கள், டேப்லட்களை விடவும் ஸ்மார்ட்போன்களுக்கான கேட்ஜெட்களுக்கு 65 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த பவர் பேங்க் ரூ.5,999-க்கு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது அமேசானின் இந்த சேலில் வெறும் ரூ.3,299-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி பட்ஸ் 4 ப்ரோ
சாம்சங் கேலக்ஸி பட்ஸ் 4 ப்ரோ (Samsung Galaxy Buds 4 Pro) தனது அசல் விலையான ரூ.29,999-ல் இருந்து வெறும் ரூ.19,499-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர அமேசான் சேலில் இந்த பட்ஸை வாங்கும் நபர்கள் ஹெச்டிஎஃப்சி கிரெடிட் கார்டு பயன்படுத்தி கூடுதலாக 10 சதவீதம் தள்ளுபடி மற்றும் மாத தவணை பெற்றுக்கொள்ளலாம்.
இதையும் படிங்க : ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.. யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம்!
ரூ.49,999-க்கு கிடைக்கும் ஒன்பிளஸ் 13எஸ்
இந்த ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போன் (OnePlus 13 Smartphone) ரூ.57,999-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், அமேசான் சேலில் வெறும் ரூ.49,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. எச்டிஎஃப்சி கிரெடிட் கார்டு பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் நபர்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.