AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தொடங்கியது அமேசான் கிரேட் ப்ரீடம் சேல்.. என்ன என்ன தள்ளுபடிகள், சலுகைகள்.. முழு விவரம் இதோ!

Amazon Freedom Sale 2026 Live Now | சுதந்திர தினத்தை முன்னிட்டு அமேசான் நிறுவனம் தனது ப்ரீடம் சேலை அறிவித்தது. இன்று (ஆகஸ்ட் 07, 2026) இந்த சேல் ஆகஸ்ட் 12, 2026 அன்றுடன் நிறைவடைய உள்ளது. இந்த சேல் குறித்து விரிவாக பார்க்கலாம்.

தொடங்கியது அமேசான் கிரேட் ப்ரீடம் சேல்.. என்ன என்ன தள்ளுபடிகள், சலுகைகள்.. முழு விவரம் இதோ!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 07 Aug 2026 12:37 PM IST

இந்தியா தனது 80வது சுதந்திர தின விழாவை (80th Independence Day) ஆகஸ்ட் 15, 2026 அன்று கொண்டாட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது ப்ரீடம் சேலை அறிவிக்கும். அந்த வகையில் இந்த ஆண்டும் இந்த இரண்டு பெரிய இ காமர்ஸ் நிறுவனங்களும் தங்களது ப்ரீடம் சேலை (Amazon Great Freedom Sale) அறிவித்துள்ளன. இந்த நிலையில், அமேசான் கிரேட் ப்ரீடம் சேலில் என்ன என்ன சிறப்பு தள்ளுபடிகள் வழங்கப்பட உள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இன்று முதல் அமேசான் கிரேட் பிரீடம் சேல் – என்ன என்ன சலுகைகள்

அமேசான் கிரேட் ப்ரீடம் சேல் இன்று (ஆகஸ்ட் 07, 2026) முதல் தொடங்கியுள்ளது. இந்த சேலில் ஸ்மார்ட்போன்கள், மின்சாதன பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவற்றுக்கு அசத்தல் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் வழங்கப்படுகிறது. நீங்கள் புதியதாக வாங்க நினைத்தாலோ அல்லது உங்களிடம் ஏற்கனவே இருக்கும் பழைய பொருட்களை மாற்றம் செய்ய விரும்பினாலோ இந்த சேல் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

இதையும் படிங்க : ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் 1.20 லட்சம் கேப்களை அறிமுகம் செய்யும் ஊபர்.. இந்தியாவில் புதிய சாதனை!

கூடுதலாக என்ன என்ன சலுகைகளை பெறலாம்?

  • எச்டிஎஃப்சி வங்கியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி மாத தவணை முறையில் பொருட்களை வாங்கும் பட்சத்தில் உடனடியாக 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.
  • அமேசான் பிரைம் பயன்படுத்தும் நபர்கள் இந்த சேலில் சில கூடுதல் சலுகைகளை பெறலாம்.
  • அமேசான் பே ஐசிஐசிஐ கிரெடி கார்டை பயன்படுத்தி 5 சதவீதம் வரை கேஷ்பேக் பெறலாம்.
  • பிரைம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ரூ.2,500 வரவேற்பு போனசாக பெற்றுக்கொள்ளலாம்.
  • இந்த சேலில் பல்வேறு நிறுவனங்களில் ஸ்மார்ட்போன்களுக்கு No Cost EMI சலுகை வழங்கப்படுகிறது.
  • சில குறிப்பிட்ட பொருட்களுக்கு எக்ஸ்சேஞ் சலுகைகளும் வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க : பயனர்களின் வாட்ஸ்அப் கணக்கை 24 மணி நேரம் மூடிய மெட்டா.. காரணம் என்ன?

அட்டகாசமான அம்சங்களை கொண்ட இந்த சேல் இன்று (ஆகஸ்ட் 07, 2026) தொடங்கும் நிலையில், ஆகஸ்ட் 12, 2026 அன்று நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us