ரூ.1க்கு புதிய சிம் – அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் தினசரி டேட்டா – பிஎஸ்என்எல்லின் சுதந்திர தின ஆஃபர்
BSNL Independence Day Offer : பிஎஸ்என்எல் ஃப்ரீடம் 2.0 திட்டத்தின் கீழ் புதிய சிம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்தியா முழுவதும் எந்த நெட்வொர்க்கிற்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் வழங்கப்படுகிறது. அதனுடன் தினமும் 1 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் இலவசமாக கிடைக்கும்.
இந்தியாவின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிஎஸ்என்எல் நிறுவனம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஃப்ரீடம் 2.0 என்ற சிறப்பு ஆஃபரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் புதிய வாடிக்கையாளர்கள் வெறும் வெறும் ரூ.1 மட்டும் செலுத்தி புதிய சிம் கார்ட் பெறலாம். இந்த சிம் கார்டின் ஸ்பெஷல் என்னவென்றால் வாடிக்கையாளர்கள் அன்லிமிடெட் போன் கால், தினசரி டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் வசதிகளை பெறலாம். இந்த சிறப்பு சலுகை ஆகஸ்ட் 12, 2026 முதல் செப்டம்பர் 12, 2026 வரை மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.1 திட்டத்தில் என்னென்ன கிடைக்கும்?
பிஎஸ்என்எல் ஃப்ரீடம் 2.0 திட்டத்தின் கீழ் புதிய சிம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்தியா முழுவதும் எந்த நெட்வொர்க்கிற்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் வழங்கப்படுகிறது. அதனுடன் தினமும் 1 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் இலவசமாக கிடைக்கும். இந்த அனைத்து சிறப்பம்சங்களையும் 24 நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் புதிய சிம் வாங்கியவுடன் பெரிய ரீசார்ஜ் செய்யாமலேயே திட்டங்களை அனுபவிக்க முடியும்.
இதையும் படிக்க : ஒன்பிளஸ் நோர்டு 6 ஸ்மார்ட்போனுக்கு ரூ.11,000 தள்ளுபடி.. சலுகைகளை வாரி வழங்கும் ஒன்பிளஸ்!




இந்த சலுகை புதிதாக சிம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் ஏற்கனவே பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் இந்த சேவையை பெற முடியாது. அதே நேரம் குறைந்த செலவில் 2வது சிம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த திட்டத்தில் புதிய சிம் வாங்க விரும்புகிறவர்கள் நேரடியாக அருகில் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் மையம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட விற்பனை மையத்திற்கு சென்று புதிய சிம் கார்டை வாங்கிக்கொள்ளலாம். பிஎஸ்என்எல் நிறுவனம் இது போன்ற ரூ.1 க்கு புதிய சிம் வழங்குவது இது முதன்முறை அல்ல. கடந்த 2025 ஆம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு ஏற்கனவே இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க : யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்படுமா? மத்திய அரசு விளக்கம்
இது தொடர்பாக சென்னையில் நிருபர்களிடம் பிஎஸ்என்எல் சென்னை தொலைபேசி தலைமை பொது மேலாளர் சுதாகர ராவ் ஆகஸ்ட் 14, 2026 இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், “80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிஎல்என்எல் நிறுவனம் புதிய சலுகைகள் அறிவித்துள்ளது. அதன் படி, ஒரு ரூபாய்க்கு ஃப்ரீடம் பிளான் என்ற சிறப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய வாடிக்கையாளர்களுக்காக, ஒரு ரூபாய்க்கு ஃப்ரீடம் பிளான் என்ற சிறப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்புகள், தினசரி ஒரு ஜிபி டேட்டா, தினசரி, 100 எஸ்எம்எஸ் மற்றும் 24 நாட்கள் செல்லுபடியாகும் காலம் வழங்கப்படுகிறது. இச்சலுகை செப்டம்பர் 12, 2026 வரை கிடைக்கும் என்றார்.