AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Asia Cup 2026: விரைவில் ஆசிய கோப்பை.. காயத்தால் விலகிய ஜெமிமா ரோட்ரிக்ஸ்..!

Jemimah Rodrigues Ruled Out: ஜெமிமா ரோட்ரிக்ஸுக்குப் பதிலாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தொடக்க ஆட்டக்காரர் பிரதிகா ராவல், இதுவரை ஒரு டி20 சர்வதேசப் போட்டியில்கூட விளையாடியதில்லை. அதுமட்டுமின்றி, பிரதிகா ராவல் 2026 மகளிர் பிரீமியர் லீக் தொடரில்கூட விளையாடவில்லை. எனவே, ஆசியக் கோப்பைத் தொடரில் இந்திய அணியின் ஆடும் லெவனில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Asia Cup 2026: விரைவில் ஆசிய கோப்பை.. காயத்தால் விலகிய ஜெமிமா ரோட்ரிக்ஸ்..!
ஜெமிமா ரோட்ரிக்ஸ்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 14 Aug 2026 21:13 PM IST

ஆசிய கோப்பை (Asia Cup 2026) மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்பே மகளிர் அணியும் காயங்களால் பாதிக்கப்பட்டு வருகிறது. 2025 மகளிர் உலகக் கோப்பையை இந்திய மகளிர் அணி (Indian Womens Cricket Team) வெல்ல முக்கிய காரணமாக இருந்த நட்சத்திர வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் இந்த முக்கியமான இரண்டு போட்டிகளையும் தவறவிட்டுள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்ற ‘தி ஹன்ட்ரட்’ தொடரின் போது ஜெமிமாவுக்குக் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக, ஜெமிமா பாதியிலேயே தொடரிலிருந்து விலக நேரிட்டது. அதன்பிறகு, ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆசிய கோப்பையில் விளையாடுவாரா இல்லையா என்பது குறித்து விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்தது. ஆசிய கோப்பைத் தொடர் நெருங்கி வரும் நிலையில், பிசிசிஐ மருத்துவக் குழு பெங்களூருவில் உள்ள சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸில் ஜெமிமாவை பரிசோதித்தது. அந்தப் பரிசோதனையில், அவருக்குத் தொடைத்தசையில் கடுமையான காயம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

ALSO READ: வெளியான மகளிர் ஆசிய கோப்பை அட்டவணை.. இந்தியா – பாகிஸ்தான் போட்டி எப்போது..?

ஆசிய கோப்பைத் தொடருக்கு முன்பு காயத்திலிருந்து மீள்வது ஜெமிமாவுக்குக் கடினமாக இருந்ததால், பிசிசிஐ அவரை அத்தொடரிலிருந்து விலக்கியுள்ளது. ஜெமிமாவுக்குப் பதிலாக பிரதிகா ராவல் ஆசிய கோப்பைத் தொடரில் விளையாடுவார் என்று பிசிசிஐ ஒரு அறிக்கையை வெளியிட்டு தெளிவுபடுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, ஜெமிமா ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் விளையாட மாட்டார்.

பிரதிகா ராவல் தனது டி20 அறிமுகத்தை பெறுவாரா?


ஜெமிமா ரோட்ரிக்ஸுக்குப் பதிலாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தொடக்க ஆட்டக்காரர் பிரதிகா ராவல், இதுவரை ஒரு டி20 சர்வதேசப் போட்டியில்கூட விளையாடியதில்லை. அதுமட்டுமின்றி, பிரதிகா ராவல் 2026 மகளிர் பிரீமியர் லீக் தொடரில்கூட விளையாடவில்லை. எனவே, ஆசியக் கோப்பைத் தொடரில் இந்திய அணியின் ஆடும் லெவனில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். பிரதிகா ராவல் 2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாடினார். ஆனால், காலிறுதிப் போட்டிக்கு முன்பே காயம் காரணமாக பிரதிகா ராவல் அந்தத் தொடரிலிருந்து விலகினார். அப்போது அவருக்குப் பதிலாக ஷஃபாலி வர்மா அணியில் சேர்க்கப்பட்டார்.

ALSO READ: ஆண்கள் மற்றும் மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை.. முழு அட்டவணை விவரம்!

ஆசிய கோப்பைத் தொடர் 2026 ஆகஸ்ட் 28ம் தேதி முதல் தொடங்குகிறது. இத்தொடரில் இந்தியாவின் முதல் போட்டி 2026 ஆகஸ்ட் 30ம் தேதி தாய்லாந்துக்கு எதிராக நடைபெறும். அதனைத் தொடர்ந்து, 2026 செப்டம்பர் 3ம் தேதி ஹாங்காங்குடனும், 2026 செப்டம்பர் 5ம் தேதி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தானுடனும் போட்டிகள் நடைபெறும்.

மகளிர் ஆசிய கோப்பைக்கான அப்டேட் செய்யப்பட்ட அணி:

ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா, பார்தி புல்மாலி, தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ஜி கமாலினி, அருந்ததி ரெட்டி, பிரேமா ராவத், ராதா யாதவ், ஸ்ரீ சரணி, ரேணுகா சிங் தாகூர், நந்தினி சர்மா, க்ராந்தி கவுட், பிரதிகா ராவல்

Follow Us