AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Womens Asia Cup 2026: வெளியான மகளிர் ஆசிய கோப்பை அட்டவணை.. இந்தியா – பாகிஸ்தான் போட்டி எப்போது..?

Womens Asia Cup 2026 Schedule: மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் (India vs Pakistan) போட்டியனாது வருகின்ற 2026 செப்டம்பர் 5ம் தேதி நடைபெறும்.  டி20 வடிவத்தில் நடைபெறும் மகளிர் ஆசியக் கோப்பையின் ஆறாவது பதிப்பு இதுவாகும். 8 அணிகள் 2 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' குழுவில் இந்தியாவும் பாகிஸ்தானும் இடம்பெற்றுள்ளன.

Womens Asia Cup 2026: வெளியான மகளிர் ஆசிய கோப்பை அட்டவணை.. இந்தியா – பாகிஸ்தான் போட்டி எப்போது..?
2026 மகளிர் ஆசிய கோப்பை அட்டவணைImage Source: ACC
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 07 Aug 2026 15:36 PM IST

ஐசிசி கீழ் இயங்கும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) இன்று அதாவது 2026 ஆகஸ்ட் 6ம் தேதி 2026 மகளிர் ஆசிய கோப்பைக்கான அட்டவணையை வெளியிட்டது. இத்தொடரானது வருகின்ற 2026 ஆகஸ்ட் 28ம் தேதி தொடங்கி, 2026 செப்டம்பர் 13ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும். அதேநேரத்தில், மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா – பாகிஸ்தான் (India vs Pakistan) போட்டியனாது வருகின்ற 2026 செப்டம்பர் 5ம் தேதி நடைபெறும்.  டி20 வடிவத்தில் நடைபெறும் மகளிர் ஆசியக் கோப்பையின் ஆறாவது பதிப்பு இதுவாகும். 8 அணிகள் 2 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ குழுவில் இந்தியாவும் பாகிஸ்தானும் இடம்பெற்றுள்ளன. ‘ஏ’ குழுவில் தாய்லாந்து, ஹாங்காங் மற்றும் சீனா ஆகிய அணிகளும் அடங்கும். ‘பி’ குழுவில் இலங்கை, வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தோனேசியா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

ALSO READ: ஒருநாள் உலகக் கோப்பைக்கான தகுதிச்சுற்று அட்டவணை.. முக்கிய அப்டேட் கொடுத்த ஐசிசி!

இந்திய அணி எப்போது தனது முதல் விளையாடுகிறது..?


இந்திய அணி தனது பயணத்தை வருகின்ற 2026 ஆகஸ்ட் 30ம் தேதி தாய்லாந்துக்கு எதிரான முதல் போட்டியுடன் தொடங்குகிறது. இந்த முறை இந்திய அணி எப்படி செயல்படுகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அனைத்துப் போட்டிகளும் துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மின்விளக்குகளின் கீழ், உள்ளூர் நேரப்படி மாலை 6:30 மணிக்குத் தொடங்கும். மொத்தம் 15 போட்டிகள் ஒரே மைதானத்தில் நடைபெறும்.

லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒருமுறை விளையாடும். மேலும் முதல் 2டு இடங்களைப் பெறும் அணிகள் 2026 செப்டம்பர் 10 மற்றும் 2026 செப்டம்பர் 11 ஆகிய தேதிகளில் நடைபெறும் அரையிறுதிப் போட்டிகளுக்குத் தகுதி பெறும். அரையிறுதியில் வெற்றி பெறும் 2 அணிகளும் 2026 செப்டம்பர் 13ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் மோதும். இந்த முறை இந்திய அணியே சாம்பியன் பட்டத்தையே வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ: ஆசிய கோப்பை 2026 : இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கான வாய்ப்பு குறைவா? என்ன காரணம்?

இலங்கை நடப்பு சாம்பியனாக இத்தொடரில் நுழைகிறது. 2024ம் ஆண்டு நடைபெற்ற தொடரை இலங்கை இந்தியாவைத் தோற்கடித்து வென்றது. அதன்படி, நடப்பு சாம்பியனான இலங்கை, 2026 ஆகஸ்ட் 29ம் தேதி வங்கதேசத்திற்கு எதிராக தனது பயணத்தைத் தொடங்குகிறது. இத்தொடரில் இந்தியா மிகவும் வெற்றிகரமான அணியாக உள்ளது.

Follow Us