AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs SL: இலங்கை டெஸ்ட் இவ்வளவு ஸ்பெஷலா? இதுவரை 38 கேப்டன்கள்.. 600வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் இந்தியா!

India Play Historic 600th Test: இந்தியா தனது முதல் டெஸ்ட் போட்டியை 1932-ல் விளையாடியது. அப்போதைய இந்திய அணிக்கு சி.கே. நாயுடு கேப்டனாக இருந்தார். அன்று முதல், இந்தியாவின் 94 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 38 கேப்டன்கள் இந்தியாவை வழிநடத்தியுள்ளனர்.

IND vs SL: இலங்கை டெஸ்ட் இவ்வளவு ஸ்பெஷலா? இதுவரை 38 கேப்டன்கள்.. 600வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் இந்தியா!
சுப்மன் கில்Image Source: BCCI/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 06 Aug 2026 08:00 AM IST

இந்தியா – இலங்கை இடையிலான (IND vs ENG) முதல் டெஸ்ட் போட்டியானது வருகின்ற 2026 ஆகஸ்ட் 15ம் தேதி காலி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இதில், இலங்கைக்கு எதிரான காலி டெஸ்ட் போட்டி இந்திய அணிக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியாக அமையும். இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்குவதன் மூலம், இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு மைல்கல்லை எட்டும். களத்தில் இறங்குவதன் மூலம் இந்திய அணி (Indian Cricket Team) வரலாறு படைக்கும். இந்தியாவின் 94 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில், இதுவரை 38 கேப்டன்கள் இந்த மைல்கல்லை எட்ட வழிநடத்தியுள்ளனர்.

ALSO READ: இலங்கையில் கால் வைத்ததும் களமிறங்கிய இந்திய வீரர்கள்.. பீல்டிங்கில் தீவிர பயிற்சி!

உலகளவில் 3வது நாடு:


காலி டெஸ்ட் போட்டியானது இந்திய அணிக்கு 600-வது டெஸ்ட் போட்டியாக அமையும். ஆசியாவில் 600 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் நாடு என்ற பெருமையை இந்திய அணி படைக்கும். மேலும், உலக அளவில் மூன்றாவது நாடாகவும் இது திகழும். இந்தியாவிற்கு முன்பு, இங்கிலாந்து 1097 டெஸ்ட் போட்டிகளிலும், ஆஸ்திரேலியா 882 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளன.

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடியது எப்போது..?

இந்தியா தனது முதல் டெஸ்ட் போட்டியை 1932-ல் விளையாடியது. அப்போதைய இந்திய அணிக்கு சி.கே. நாயுடு கேப்டனாக இருந்தார். அன்று முதல், இந்தியாவின் 94 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 38 கேப்டன்கள் இந்தியாவை வழிநடத்தியுள்ளனர். மன்சூர் அலி கான் பட்டோடி, கபில் தேவ், முகமது அசாருதீன், சௌரவ் கங்குலி, தோனி, விராட் கோலி போன்ற வெற்றிகரமான கேப்டன்கள் இதில் அடங்குவர். இதில் சிறப்பு என்னவென்றால், இந்திய அணியின் 600-வது டெஸ்ட் போட்டியை சுப்மன் கில் வழிநடத்துவார்.

ALSO READ: ரோஹித் சர்மாவை நீக்க விரும்பிய அகர்கர்.. பிசிசிஐ வைத்த ஆப்பு.. வெளியேறும் தலைமை தேர்வாளர் பதவி!

இந்தியா இதுவரை விளையாடிய 599 டெஸ்ட் போட்டிகளில் 188 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. 186 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள போட்டிகள் சமனில் முடிந்துள்ளன. இந்தியாவின் வெற்றி சதவீதம் 31.13 ஆகும். சுப்மன் கில் தலைமையில் இந்தியா இதுவரை 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. அவற்றில், 5 போட்டிகளில் வெற்றியும் 3 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. இலங்கைக்கு எதிரான கடந்த 6 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா ஒரு போட்டியில் கூட தோல்வியடையவில்லை. இந்தத் தொடரிலும் அதே நம்பிக்கை தற்போது உள்ளது.

Follow Us