ஸ்மார்ட்போன் ஸ்பீக்கரை சுத்தம் செய்வது எப்படி?.. முக்கிய டிப்ஸ்கள் இதோ!
Best Way To Clear Smartphone Speaker | ஸ்மார்ட்போனில் இருக்கும் ஸ்பீக்கர்களில் அதிக அழுக்கு படியும் வாய்ப்பு உள்ளது. இந்த அழுக்கை சுத்தம் செய்யவில்லை என்றால் போன் கால் பேசுவது உள்ளிட்டவற்றில் சிக்கல்களை எதிர்க்கொள்ள நேரிடும். இந்த நிலையில், ஸ்மார்ட்போன் ஸ்பீக்கரை சுத்தம் செய்வது எப்படி என பார்க்கலாம்.
தற்போதைய காலக்கட்டத்தில் கையில் ஸ்மார்ட்போன் (Smartphone) இல்லாத நபர்களை பார்க்கவே முடியாது. எங்கு சென்றாலும், கையில் ஸ்மார்ட்போனை எடுத்துச் செல்லும் பழக்கம் பெரும்பாலானோருக்கு உள்ளது. பயணத்தின் போது, கடைக்கு செல்லும்போது, அலுவலகங்களுக்கு செல்லும்போது என பொதுவெளிகளில் அதிகம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தப்படுவதன் காரணமாக, அதன் ஸ்பீக்கர்களில் (Speaker) தூசி படிந்து முறையாக வேலை செய்யாமல் போய்விடும்.
அத்தகைய சூழலில் எதிரே இருப்பவர் பேசுவது கேட்காமல் போவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே தான், ஸ்மார்ட்போன் ஸ்பீக்கர்களை அடிக்கடி சுத்தம் செய்வது மிகவும் அவசியமானதாக உள்ளது. இந்த நிலையில், ஸ்மார்ட்போன் ஸ்பீக்கர்களை சுத்தம் செய்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஸ்பீக்கர் சுத்தம் செய்வதற்கான முக்கிய பாதுகாப்பு அம்சங்கள்
ஸ்பீக்கர்களை சுத்தம் செய்வதற்கு அது குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள் உள்ளன. அதாவது, ஸ்பீக்கரில் அதிக திரவத்தையோ, அல்லது கடினமாக துணிகளை கொண்டு சுத்தம் செய்ய கூடாது.




இதையும் படிங்க : இனி எவ்வளவு நேரங்கள் வேண்டுமானாலும் விளம்பரங்கள் ஒளிபரப்பலாம் – மத்திய அரசின் புதிய முடிவு
ஸ்பீக்கரை சுத்தம் செய்வது எப்படி?
உங்கள் ஸ்மார்ட்போன் ஸ்பீக்கரை பஞ்சு கொண்டோ அல்லது உளர்ந்த துணியை கொண்டோ நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். ஸ்பீக்கரை துடைக்கும்போது அதிக அழுத்தம் கொண்டோ, திரவங்களை கொண்டோ சுத்தம் செய்வதை தவிர்க்க வேண்டும். காரணம், அவ்வாறு செய்வதன் மூலம் ஸ்பீக்கர் பாதிப்புக்கு உள்ளாவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இதையும் படிங்க : ரூ.1க்கு புதிய சிம் – அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் தினசரி டேட்டா – பிஎஸ்என்எல்லின் சுதந்திர தின ஆஃபர்
காற்று மூலம் சுத்தம் செய்வது எப்படி?
காற்று மூலம் ஸ்மார்ட்போன் ஸ்பீக்கரை சுத்தம் செய்வது மிகவும் சுலபமானது. நீங்கள் Dust Blower அல்லது Bulb Blower ஆகியவற்றை பயன்படுத்தி உங்கள் ஸ்மார்ட்போனின் ஸ்பீக்கரில் உள்ள தூசியை சுத்தம் செய்யலாம். காற்றை தூசி படிந்த ஸ்பீக்கரின் மீது அடிப்பதன் மூலம் தூசி வெளியே வந்துவிடும். அதன்பிறகு, மெல்லிய துணியை கொண்டு அதில் இருக்கு தூசியை துடைத்து எடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.