யுபிஐ பண பரிவர்த்தனை செய்யும்போது இவை குறித்து கவனம் தேவை.. ஆர்பிஐ கூறும் முக்கிய அறிவுரை!
RBI's Two Main Instructions To Send Money Through UPI | தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான மக்கள் யுபிஐ மூலம் பண பரிவர்த்தனை செய்கின்றனர். இந்த நிலையில், யுபிஐ மூலம் பண பரிவர்த்தனை செய்யும்போது இந்த 2 விஷயங்கள் குறித்து கவனமாக இருக்க ஆர்பிஐ கூறுகிறது.
தற்போதைய சூழலில் பெரும்பாலான இந்தியர்கள் யுபிஐ (UPI – Unified Payment Interface) பண பரிவர்த்தனை மேற்கொள்கின்றனர். மிகவும் விரைவாகவும், எளிதாகவும் பண பரிவர்த்தனை செய்ய முடிகிறது என்பதால் பலரும் அதனை தேர்வு செய்கின்றனர். ஆனால், யுபிஐ பண பரிவர்த்தனை முறையில் பல சிக்கல்களையும் பயனர்கள் எதிர்க்கொள்கின்றனர். இந்த நிலையில் தான், பாதுகாப்பாக யுபிஐ பண பரிவர்த்தனை மேற்கொள்ள இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank Of India) சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அவை என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
யுபிஐ பண பரிவர்த்தனையில் உள்ள முக்கிய சிக்கல்
வங்கி கணக்கு விவரங்கள் எதனையும் உள்ளிடாமல் வெறும் பெயர் அல்லது மொபைல் எண்ணை டைப் செய்வதன் மூலம் பணம் அனுப்ப முடியும் என்பதால் யுபிஐ பண பரிவர்த்தனை மிகவும் எளிதானதாக உள்ளது. இதன் காரணமாக, பலரும் தங்களது அன்றாட பண பரிவர்த்தனைகளை யுபிஐ மூலமே மேற்கொள்கின்றனர். அவ்வாறு யுபிஐ மூலம் பண பரிவர்த்தனை செய்யும்போது பெரும்பாலான நபர்கள் எதிர்க்கொள்ளும் சிக்கல் தான் வேறு நபருக்கு பண பரிவர்த்தனை செய்வது. இது குறித்து தான் சில முக்கிய வழிகாட்டுதல்களை ஆர்பிஐ வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க : முதலீட்டை 2 மடங்காக மாற்றும் திட்டங்கள்.. எப்போது முழு பலன் கிடைக்கும்.. தெரிந்துக்கொள்ளுங்கள்!




ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய வழிகாட்டுதல்கள் – என்ன என்ன?
- நீங்கள் யுபிஐ-ல் பணம் அனுப்புவதற்கு முன்னதாக, நீங்கள் பணம் அனுப்ப முயற்சிக்கும் நபரின் பெயர், அதாவது பயனாளியின் பெயர் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள்.
- அடுத்த முக்கியமான விஷயம் தான் தொகை. பலரும் ஒரு பூஜியத்தை அதிகமாக சேர்த்து அனுப்பி விடுவர். எனவே நீங்கள் பணம் அனுப்புவதற்கு முன்னதாக அந்த தொகை சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள்.
இதையும் படிங்க : Gold : 10 கிராம் தங்கம் ரூ.15 லட்சம் வரை செல்லும்.. தாமஸ் கப்லான் சொன்ன ஷாக் தகவல்.. அதிர்ச்சியில் நகை பிரியர்கள்!
யுபிஐ-ல் பண பரிவர்த்தனை செய்வதற்கு முன்னதாக மேலே கூறப்பட்டுள்ள இந்த இரண்டு விஷயங்களை சரியாக செய்யும் பட்சத்தில், எந்த வித சிக்கலும் ஏற்படாது. தெரிந்தவர்களுக்கு பணம் அனுப்பும் பட்சத்தில் இது சிக்கல் இல்லை. ஆனால், தெரியாதவர்களுக்கு பணம் அனுப்புவது சிக்கலில் முடிந்துவிடும். எனவே இது குறித்து கவனமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது.