AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

முதலீட்டை 2 மடங்காக மாற்றும் திட்டங்கள்.. எப்போது முழு பலன் கிடைக்கும்.. தெரிந்துக்கொள்ளுங்கள்!

When Will Your Investment Become Double | முதலீடு செய்யும் பணம் நல்ல லாபத்தை தர வேண்டும் என பலரும் ஆசைப்படுகின்றனர். இந்த நிலையில், ஒரு திட்டத்தில் முதலீடு செய்து இரண்டு மடங்கு லாபம் பெற எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பது குறித்து பார்க்கலாம்.

முதலீட்டை 2 மடங்காக மாற்றும் திட்டங்கள்.. எப்போது முழு பலன் கிடைக்கும்.. தெரிந்துக்கொள்ளுங்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 29 Aug 2026 16:46 PM IST

சம்பாதிக்கும் பணத்தை முதலீடு செய்தால் தான் பொருளாதாரத்தை உயர்த்தி நிதி பாதுகாப்பை பெற முடியும் என்ற புரிதல் பொதுமக்களிடையே பரவலாக காணப்படுகிறது. ஆனால் அவ்வாறு முதலீடு செய்ய நினைக்கும் பொதுமக்கள் சில சிக்கல்களையும் சந்திக்கின்றனர். அதாவது, எந்த திட்டத்தில் முதலீடு செய்வது, முதலீடு செய்யும் பணம் பாதுகாப்பாகவும், அதற்கு நல்ல வட்டியும் கிடைக்குமா என்பதுதான். இந்த நிலையில் தான், பொதுமக்களின் பணத்திற்கு உத்தரவாதத்துடன், சிறந்த லாபம் தரக்கூடிய சில திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அத்தகைய அரசு திட்டங்கள் குறித்தும், அதில் முதலீடு செய்வதால் கிடைக்கும் பலன்கள் குறித்தும் விரிவாக பார்க்கலாம்.

டபுள் மடங்கு லாபம் தரும் அரசாங்க திட்டங்கள்

முதலீடு செய்யும் பணத்திற்கு இரண்டு மடங்கு லாபம் கிடைக்கிறது என்றால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். அத்தகைய திட்டங்களை தான் அரசு அஞ்சலங்கள் மூலம் செயல்படுத்தி வருகிறது. கையில் ரூ.50,000 பணத்தை வைத்துக்கொண்டு அதனை ரூ.1 லட்சமாக மாற்ற வேண்டும் என நினைத்தால் நீங்கள் இந்த திட்டங்களை தேர்வு செய்வது உங்களுக்கு சிறந்த பலன்களை கொடுக்கும்.

இதையும் படிங்க : இன்னும் 3 நாட்களே உள்ளன.. கேஸ் சிலிண்டர் கேஒய்சி முடிக்கவில்லை என்றால் சிக்கல்!

என்ன என்ன திட்டங்கள்

பல்வேறு சிறப்பு பலன்களை கொண்ட பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை அஞ்சலங்கள் மூலம் அரசு செயல்படுத்தி வருகிறது. இவற்றில் கிசான் விகாஸ் பத்ரா, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் போன்றவை உங்களது முதலீட்டை இரட்டிப்பாக்க உதவும் அம்சங்கள் கொண்டவை.

முதலீடு செய்யும் பணம் எப்போது இரட்டிப்பாகும்?

உங்கள் பணம் எப்போது இரண்டு மடங்காக மாறும் என்பதை நீங்கள் ரூல் ஆஃப் 72 ஃபார்முளாவை வைத்து சுலபமாக கண்டுபிடித்துவிடலாம். அதாவது, 72-ஐ நீங்கள் முதலீடு செய்யும் திட்டத்தின் வட்டி விகிதத்தோடு வகுக்க வேண்டும். அப்போது எந்த எண் கிடைக்கிறதோ, அத்தனை ஆண்டுகளில் தான் உங்கள் முதலீடு இரண்டு மடங்காக உயரும்.

இதையும் படிங்க : இன்னும் 3 நாட்களே உள்ளன.. கேஸ் சிலிண்டர் கேஒய்சி முடிக்கவில்லை என்றால் சிக்கல்!

அதாவது, நீங்கள் முதலீடு செய்யும் திட்டத்திற்கு 7.5 சதவீதம் வட்டி வழக்கப்படுகிறது என வைத்துக்கொள்வோம். இந்த நிலையில் 72-ஐ, 7.5 என்ற வட்டி விகிதத்தால் வகுக்க வேண்டும். வகுத்தால் 9.6 கிடைக்கும். அப்படியானால், 9.6 ஆண்டுகளில் உங்களது முதலீடு இரண்டு மடங்காக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us