Gold Price: அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ. 2,360 குறைந்து விற்பனை..
இன்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.14,505-க்கும், ஒரு சவரன் ரூ.1,16,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.15,824-க்கும், ஒரு சவரன் ரூ.1,26,592-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஜூன் மாதம் தொடங்கியது முதல் தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்ற, இறக்கங்கள் நிலவி வந்தன.
ஆகஸ்ட் 29, 2026: தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் நிலையில், இன்று (ஆகஸ்ட் 29) ஒரே நாளில் அதிரடியாக குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.295 குறைந்துள்ள நிலையில், ஒரு சவரன் தங்கம் ரூ.2,360 வரை குறைந்துள்ளது. இதனால் நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று (ஆகஸ்ட் 28) ஒரு கிராம் தங்கம் ரூ.75 குறைந்து விற்பனை செய்யப்பட்ட நிலையில், ஒரு சவரன் ரூ.600 குறைந்திருந்தது. இந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை மேலும் கணிசமாக சரிந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?
இன்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.14,505-க்கும், ஒரு சவரன் ரூ.1,16,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.15,824-க்கும், ஒரு சவரன் ரூ.1,26,592-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஜூன் மாதம் தொடங்கியது முதல் தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்ற, இறக்கங்கள் நிலவி வந்தன. குறிப்பாக, ஆகஸ்ட் மாதத்தில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.15,000-ஐ கடந்து விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது தொடர்ந்து சரிவை சந்தித்து ரூ.14,000-க்கும் மேல் என்ற நிலைக்கு குறைந்துள்ளது.
மேலும் படிக்க: இன்னும் 3 நாட்களே உள்ளன.. கேஸ் சிலிண்டர் கேஒய்சி முடிக்கவில்லை என்றால் சிக்கல்!
வரும் நாட்களிலும் தங்கம் விலை தொடர்ந்து சரிந்தால், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.13,000 வரை குறைய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், உலக பொருளாதாரத்தில் நிலவும் நிலையற்ற தன்மை, மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏற்ற, இறக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.
இதனிடையே, வரும் நாட்களில் தங்கத்தின் விலை மீண்டும் சற்று உயரக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
மேலும் படிக்க: அமைச்சர் வன்னி அரசு பேச்சுக்கு சோபா மாடல் என திமுக கிண்டல்.. பேரவையில் காரசாரமான சூழல்!
வெள்ளி விலையிலும் மாற்றம்:
வெள்ளி விலையும் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.5 குறைந்துள்ளது. சென்னையில் தற்போது ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் ஏற்ற, இறக்கங்களுடன் காணப்பட்ட வெள்ளி விலை, தற்போது சரிவை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.