இன்னும் 3 நாட்களே உள்ளன.. கேஸ் சிலிண்டர் கேஒய்சி முடிக்கவில்லை என்றால் சிக்கல்!
Only Three Days Left To Complete Gas Cylinder KYC | இந்திய குடும்பங்கள் கேஸ் சிலிண்டர்களை தொடர்ந்து பெற வேண்டும் என்றால் கேஒய்சி மேற்கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. இந்த நிலையில், கேஸ் சிலிண்டர் கேஒய்சி மேற்கொள்ள கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஈரான் போரின்போது (Iran War) இந்தியாவில் மிக கடுமையான கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டதற்கு பிறகு மத்திய அரசு கேஸ் சிலிண்டர்களுக்கான இகேஒய்சியை (eKYC – Know Your Customer) கட்டாயமாக மாற்றியுள்ளது. கேஸ் சிலிண்டர்கள் உரிய நபர்களுக்கு சென்று சேர்கிறதா என்பதை உறுதி செய்ய இந்த நடைமுறையை அரசு கையில் எடுத்துள்ளது. இந்த நிலையில், கேஸ் சிலிண்டர்களுக்கான இகேஒய்சி மேற்கொள்ள ஆகஸ்ட் 23, 2026 அன்று கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டது. இருப்பிலும் சிலர் இகேஒய்சியை முடிக்காத நிலையில், அதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கேஸ் சிலிண்டர் கேஒய்சி கால அவகாசம் எவ்வளவு நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது, கேஒய்சி மேற்கொள்ளவில்லை என்றால் என்ன ஆகும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்ட கேஸ் சிலிண்டர் கேஒய்சி
கேஸ் சிலிண்டர்களுக்கு கேஒய்சி மேற்கொள்ள ஆகஸ்ட் 15, 2026 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலான இணைப்புகள் கேஒய்சியை முடிக்காததால் கடைசி தேதி ஆகஸ்ட் 23, 2026 ஆக உயர்த்தப்பட்டது. அதன் பிறகுகு சில கேஸ் சிலிண்டர் இணைப்புகளுக்கு கேஒய்சி மேற்கொள்ளாமல் உள்ளதன் காரணமாக தற்போது மீண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஆகஸ்ட் 31, 2026 வரை தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ரேஷன் இகேஒய்சி செய்ய கவலை வேண்டாம்.. தமிழ்நாடு முழுவதும் முகாம் நடத்தும் அரசு.. எப்போது?
கேஸ் சிலிண்டர் கேஒய்சி – ஆன்லைனில் செய்வது எப்படி?
- நீங்கள் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
- அதேபோல Aadhaar FaceRD செயலியையும் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
- பிறகு கேஸ் இணைப்புடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்டு, உள்ளே நுழைய வேண்டும்.
- இதன் பிறகு முகப்பு பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள LPG e-KYC என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
- அதில் கொடுக்கப்பட்டுள்ள ஒப்புதல்களை படித்து, அனுமதி கொடுத்த பிறகு உங்கள் முகத்தை ஸ்கேன் செய்ய வேண்டும்.
இதையும் படிங்க : Aadhaar : இன்னும் ஒரு மாதம் தான் உள்ளது.. பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளின் பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்துவிட்டீர்களா?
மேலே குறிப்பிடப்பட்டுள்ள முறையை பின்பற்றி நீங்கள் உங்கள் முகத்தை ஸ்கேன் செய்த பிறகு உங்களது இகேஒய்சி சில நாட்களில் ஏற்றுக்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.